Breaking News

இத்தாலியை தொடர்ந்து பிரான்சும் ஆஸ்திரேலியாவிற்கு தடுப்பூசி கொடுப்பதை நிறுத்தப்போவதாக தகவல் !

Italy planning to block vaccine exports to Australia says

இத்தாலியை போலவே பிரான்சும் ஆஸ்திரேலியாவுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்வதைத் நிறுத்துகிறது.Covid-19 தடுப்பூசி அவசியம் குறித்த கவலைகள் அதிகரித்து வருவதால் தடுப்பூசி ஏற்றுமதிகளை நிறுத்துவதை இத்தாலியை பின்பற்றலாம் என பிரான்ஸ் கூறியது. Covid-19 Astrazeneca தடுப்பூசி ஆஸ்திரேலியாவுக்கு 250,000 அளவுகளை ஏற்றுமதி செய்வதை தடுக்க ரோம் ஐரோப்பிய நாடுகள் கூறிய அடுத்த நாளே பிரெஞ்சு சுகாதார மந்திரி Olivier Veran-ன் கருத்துக்கள் வெளிவந்துள்ளன.

இத்தாலி மற்றும் ஐரோப்பிய ஆணையம் இந்த நடவடிக்கை குறித்து ஏற்றுக்கொண்டதாக இத்தாலி பிரதமர் Mario Dragi-ன் செய்தி தொடர்பாளர் பத்திரிக்கைக்கு தெரிவித்தார். மேலும் இந்த பிரச்சனையில் இத்தாலியர்களுடனும் மற்றும் அனைத்து ஐரோப்பிய பங்குதாரர்களுடனும் ஐரோப்பிய செயல் முறைகளைப் பற்றி தீவிரமாக விவாதித்து வருவதாகவும் Veran கூறினார்.

Italy planning to block vaccine exports to Australia says reportதடுப்பூசி தாமதங்கள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கும், Astrazeneca-விற்கும் இடையே ஒரு கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ஐரோப்பிய ஆணையம் புதிய நடவடிக்கைகளை ஏற்றுக்கொண்டது. மேலும் Covid-19-க்கு ஐரோப்பிய ஒன்றியத்தால் ஆஸ்திரேலியா பாதிப்படையும் நாடாக கருதப்படவில்லை எனவும் Veran குறிப்பிட்டார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை செய்தித் தொடர்பாளர் வெள்ளிக்கிழமை கூறியதாவது, ஐரோப்பிய ஒன்றியம்( EU) தடுப்பூசியில் முக்கிய ஏற்றுமதியாளர் என்பது உண்மை எனக் கூறினார். இந்த தடுப்பூசியை EMA அங்கீகரித்திருக்கிறது, மேலும் அதை பயன்படுத்துமாறு அண்டை நாடுகளை கேட்டுக்கொள்கிறோம் எனவும் கூறினார்.

Castex செய்தியாளர்களிடம் கூறுகையில்,வரும் வாரங்களில் பிரான்சுக்கு மருந்துகள் வழங்குவது அதிகரிக்கும் என கூறினார். 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தகுதியுடையவர்கள் என சுகாதார உயர் அதிகார குழுக்கள் கூறியுள்ளதையும் Castex கூறினார்.

WHO கூறியதாவது, 447 மில்லியன் ஐரோப்பிய ஒன்றிய மக்கள் தொகையில் 5.5 சதவீதம் மக்கள் மட்டுமே முதல் தடுப்பூசி அளவில் பெற்றுக்கொண்டுள்ளனர். மேலும் பிரான்ஸில் மூன்று சுகாதாரப் பணியாளர்களில் ஒருவருக்கு மட்டுமே இதுவரை தடுப்பூசி கிடைத்துள்ளதாகவும், மேலும் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகள் இன்னும் கடினமான அழுத்தத்தில் தான் உள்ளன,எனவும் Castex எச்சரித்தார்.