Breaking News

ஊரகப் பகுதிகளில் துவங்கப்பட்ட ட்ரைஸ்டார் குழுமத்தின் மருத்துவ சேவை மையம் போதிய மருத்துவர்கள் இல்லாத காரணத்தால் விரைவில் மூடப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

It has been reported that the Tristar Group's medical service center, which was set up in a rural area, may close soon due to a shortage of doctors.

ஆஸ்திரேலியாவிலுள்ள ஊரகப் பகுதிகளுக்கும் உரிய மருத்துவ சேவை கிடைக்க வேண்டும் என்கிற நோகத்தில் துவங்கப்பட்டது தான் பல்க்- பில்லிங் மருத்துவ சேவை மையம். ஆஸ்திரேலியாவின் பிரபலமான ட்ரைஸ்டார் மருத்துவக் குழுமம் இந்த மையங்களை துவங்கின.

விக்டோரியா, நியூ சவுத் வேல்ஸ் மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா என முக்கிய மாநிலங்களில் இந்த சேவை மையங்கள் நிறுவப்பட்டன. ஆனால் கடந்த 2017-ம் ஆண்டு முதல் ட்ரைஸ்டார் குழுமம் நிதி சிக்கலில் சிக்கி வருவதாக கூறப்படுகிறது.

It has been reported that the Tristar Group's medical service center, which was set up in a rural area, may close soon due to a shortage of doctorsமேலும் கொரோனா பரவல், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பிரச்னைகளால் தொடர்ந்து நிதி ஆதாரமின்றி தத்தளித்து வருவதாக சொல்லப்பட்டது. இதை தவிர்த்திட ட்ரைஸ்டார் மருத்துவக் குழு மையத்தின் நிர்வாக அதிகாரியாக மேத்யூ காடி பொறுப்பேற்றுக்கொண்டார். ஆஸ்திரேலியாவின் ஊரகப் பகுதிகளுக்கு தொடர்ந்து மருத்துவ சேவை வழங்கும் நோக்கில் பல்க்-பில்லிங் மையங்கள் செயல்படும் என்று கூறினார். ஆனால் நிதிச் சிக்கல் தொடர்ந்து அதிகரித்துள்ளதன் காரணமாக, குறிப்பிட்ட பகுதிகளில் இந்த மையம் மூடப்படவுள்ளது.

இதுதொடர்பாக பேசியுள்ள நிர்வாக அதிகாரி மேத்யூ காடி, நிதி வரவு அதிகரிக்கும் போது மூடப்படவுள்ள மையங்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இதுவரை எந்த மையங்களை மூடுவது என்பது குறித்து முடிவு செய்யப்படவில்லை என்று தெரிவித்தார்.