Breaking News

கார்ல்டன் கால்பந்தாட்ட கிளப்பின் முதன்மை செயல் அதிகாரியாக பிரெய்ன் குக் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் மிக பிரபலமான கால்பந்தாட்ட கிளப்புகளாக கார்ல்டன், ஜீலாங் போன்ற அணிகள் உள்ளன. ஜீலாங் கால்பந்தாட்ட கிளப்பின் முதன்மை செயல் அதிகாரியாக 23 ஆண்டுகளாக பொறுப்பு வகித்துள்ளார். தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார். பிரெய்ன் குக்கின் அடுத்த திட்டம் என்ன என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வந்த நிலையில், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை கார்ல்டன் கிளப் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

It has been reported that Brian Cook has been selected as the CEO of the Carlton Football Clubகார்ல்டென் கிளப்பின் முதன்மை செயல் அதிகாரியாக கடந்த 4 ஆண்டுகளாக பதவி வகித்துவந்த கெயின் லிட்டில் அண்மையில் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய புதிய பணி குறித்து கருத்து தெரிவித்துள்ள குக், கார்ல்டென் அணியை முன்னோக்கி அழைத்து செல்வதும், வெற்றியை ஈட்டுவதுமே தற்போதைய நோக்கம் என்று தெரிவித்துள்ளார். ஒற்றை நோக்கத்தில், ஒரு அணி ஒற்றுமையாக இயங்கும் போது அனைத்தும் சாத்தியப்படும் என்றும், வெற்றி சாத்தியமாகும் என்றும் குக் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அக்டோபர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் இருந்து குக் தன்னுடைய பணியை தொடங்குவார் என்று கார்ல்டென் அணி நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. ஜீலாங் கால்பந்தாட்ட கிளப்பில் பணிக்கு சேருவதற்கு முன்பாக, குக் வெஸ்ட் கோஸ்ட் கால்பந்தாட்ட கிளப்பின் முதன்மை நிர்வாக அதிகாரியாக இருந்தார் என்பதும் அப்போது ஈகிள் 1992 மற்றும் 1994 கோப்பையை வென்றதும் குறிப்பிடத்தக்கது.

Link Source: shorturl.at/yHU28