Breaking News

ஆஸ்திரேலியாவில் தொற்று உறுதி செய்யப்படுவோருக்கு 7 நாட்கள் தனிமைப்படுத்துதல் தொடரும் – பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவிப்பு

Isolation will continue for 7 days for those confirmed to be infected in Australia - Prime Minister Scott Morrison announces...

கோவிட் தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஆஸ்திரேலியாவில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக மாகாண எல்லைகள் திறப்பு, தனிமைப்படுத்துதல், பரிசோதனை, தடுப்பூசி உள்ளிட்ட விவகாரங்களில் அரசு உறுதியாக உள்ளது.

இந்நிலையில் ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனை, ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொண்டு பாசிடிவ் ஆகும் நபர்கள் கட்டாயம் 7 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், இந்த நடைமுறையில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

தேசிய அமைச்சரவை கூட்டத்தின் முடிவில் தலைமை சுகாதார அதிகாரி அறிவுறுத்தலின் படி 5 நாட்கள் ஒருவாரமாக உயர்த்தப்படுவதாகவம், பள்ளிகள் திறப்பு குறித்த தேசிய அளவிலான முடிவுகள் எதுவும் முடிவாக வில்லை என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். தொற்றுப்பரவலின் தாக்கத்தை பொறுத்த முடிவுகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஸ்காட் மோரிசன் கூறியுள்ளார்.

இதனிடையே, ஆஸ்திரேலிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு புதிய தடுப்பூசி ஒன்றிற்கு அனுமதி வழங்கி உள்ளது. பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசி பரிசோதனையில் இருந்த நிலையில் அதனை பயன்பாட்டுக்கு கொண்டு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Isolation will continue for 7 days for those confirmed to be infected in Australia - Prime Minister Scott Morrison announces.ப்ளுமவுன்டன் பகுதியில் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட பள்ளிச் சிறுமி Charlise Mutten –ன் மரணம் தனிப்பட்ட முறையில் மிகுந்த வருத்தத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தியதாக தேடுதல் பணியில் ஈடுபட்ட RFS தன்னார்வலர் தெரிவித்துள்ளார். நூற்றுக்கணக்கானோர் இயற்கை சீற்றங்களை பொருட்படுத்தாமல் இரவு, பகல் பாராமல் தேடுதல் பணியில் ஈடுபட்டவர்களுக்கு சிறுமியின் உயிரிழப்பு செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக கூறியுள்ளனர்.

Isolation will continue for 7 days for those confirmed to be infected in Australia - Prime Minister Scott Morrison announcesதெற்கு நியூசவுத் வேல்ஸ் மாகாணத்தில் Corowa பகுதியில் ப்ரீசர் ஒன்றில் இருந்து 3 மாத ஆண் குழந்தையின் சடலம் எடுக்கப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 40 வயது பெண் போலீசாரால் விடுவிக்கப்பட்டுள்ளார். ஆஸதிரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியில் இரண்டு தசாப்தங்களுக்கு பிறகு டென்னிஸ் வீராங்கனை Sam Stosur தனது கடைசி ஒற்றையர் பிரிவு ஆட்டத்தை ஆடினார். Anastasia Pavlyuchenkova வை எதிர்கொண்ட அவர் 10 வது சுற்று ஆட்டத்தில் 6-2, 6-2 என்ற புள்ளிகளில் கணக்கில் ஆட்டத்தை சமன் செய்த அவர் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்வதே தனது கனவு என்று கூறியுள்ளார்.

Link Source: https://ab.co/3o6GMeb