Breaking News

சுகாதாரப் பணியாளர்கள் தனிமைப்படுத்துதல் காலம் குறைப்பு..!!

Isolation of health workers is reduced

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்திக் கொண்டுள்ள சுகாதாரப் பணியாளர்கள் இனிமேல் 7 நாட்களுக்கு பிறகு பணிக்கு திரும்பலாம் என நியூ சவுத் வேல்ஸ் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Isolation of health workers is reduced.மாநிலம் முழுவதும் கொரோனா பரிசோதனை செய்வதிலும், கொரோனா முடிவுகளை பெறுவதிலும் தோய்வு நிலை இருந்து வருகிறது. பெரும்பாலான சுகாதாரப் பணியாளர்கள் எளிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாவதால், அவர்களுடைய தனிமைப்படுத்தல் காலத்தை மாநில சுகாதாரத்துறை மாற்றி அமைத்துள்ளது. அதன்படி பணியிடம் இடர் மதிப்பீடு என்கிற திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, குறிப்பிட்ட பணியாளர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுவிட்டாலும், அவருக்கு 2 நாட்களில் பி.சி.ஆர் சோதனை செய்யப்பட்டும். அப்போது அவருக்கு நெகட்டிவ் என முடிவு வந்தால் உடனடியாக பணிக்கு திரும்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயத்தில் குறிப்பிட்ட பணியாளர்கள் ரேபிட் ஆண்டிஜென் சோதனையை தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் பணியிடங்களில் கொரோனா தொற்றுக்கு ஆளாகும் பரிசோதனை செய்வதற்கான தேவைகளை சுகாதாரத்துறையே பூர்த்தி செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Link Source: https://ab.co/3FyRbWH