Breaking News

விக்டோரியாவில் இந்திய வகை கொரோனா வைரஸின் தாக்கம் உள்ளதா? மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டிக்க அதிகாரிகள் அமைச்சர்கள் தொடர்ந்து ஆலோசனை

புதியதாக பயணி ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது, அது இந்திய வகை தொற்றாக இருக்கலாம் என்ற அச்சத்தின் காரணமாக மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக அமைச்சர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். வியாழனன்று நள்ளிரவுடன் ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில் ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

நியூ சவுத் வேல்ஸ் -க்கு பயணம் செய்த நபர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் மூலமாக தொடர்ந்து வேகமாக பரவி இருக்கும் என்றும், பரிசோதனையில் அது இந்திய வகை வைரஸ் ஆக இருக்கலாம் என்றும் தலைமை சுகாதார அதிகாரி Brett Sutton கூறியுள்ளார். இதற்கு முந்தைய வைரஸ் பாதிப்பை விட இது பல மடங்கு வேகமாக இருப்பதாகவும் இதன் ஆபத்தை உணர்வது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Is there an impact of the Indian type of corona virus on Victoria. Officials are continuing to advise ministers to extend the lockdown for a further week,இதனையடுத்து தொற்று பாதிப்பு அபாயம் உள்ள இடங்களை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்த 300க்கும் மேற்பட்ட நபர்கள் தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது. பெருமளவு மக்கள் இன்னும் தடுப்பூசி போடாத நிலையில் தொற்று பரவும் அபாயம் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்று என்றும் கூறப்பட்டுள்ளது.

தனிநபர் ஒருவர் விக்டோரியாவில் இருந்து நியூ சவுத் வேல்ஸ் சென்று அங்கிருந்து மெல்போர்ன் திரும்பியதாகவும் அவருக்கே தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிப்பு அதிகம் உள்ள இடங்கள் தொடர்பாக சுகாதாரத்துறை இணையதளத்தில் விரிவான தகவல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Is there an impact of the Indian type of corona virus on Victoria. Officials are continuing to advise ministers to extend the lockdown for a further week.தொற்று பரவலின் தீவிரம் உணரப்பட்டு உள்ளதால் மருத்துவ நிபுணர்கள், சுகாதார அதிகாரிகள் முடிவு எடுத்த பின்னர், உடனடியாக ஊரடங்கு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் Martin Foley கூறியுள்ளார். கட்டுப்பாடுகளை பின்பற்றி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும், இதனிடையே தடுப்பூசி தொடர்பான நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்படும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

வீரியமிக்க தொற்றை கட்டுப்படுத்தும் சவாலான நடவடிக்கையில் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Link Source: https://ab.co/3uGSXP5