Breaking News

வீட்டுக்குள்ளும் மாஸ்க் அணிவது கட்டாயமா? டெல்லி அரசின் உத்தரவுக்கு மருத்து நிபுணர்கள் விளக்கம்

கோரோனா இரண்டாம் அலையின் தாக்கம் இந்தியாவில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், தலைநகரான டெல்லியில் அம்மாநில அரசு வீட்டுக்குள் இருந்தாலும் மாஸ்க் அணிவது கட்டாயம் என்ற உத்தரவை பிறப்பித்தது. இதற்கு மருத்துவ நிபுணர்கள் உத்தரவு தொடர்பான தகவல்களுக்கு தெளிவான விளக்கம் அளித்துள்ளனர்.

கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் யாரேனும் வீட்டில் இருந்தால் மற்ற நபர்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்றும், மற்றவர்களுக்கு எளிதில் தொற்று பரவும் அபாயம் இருப்பதாக நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு பணிக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள வி.கே.பால் மத்திய சுகாதாரத்துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

வீடுகளில் இருக்கும் போதும் கட்டாயம் மாஸ்க் அணியும் சூழ்நிலை வரலாம் என்றும், தற்போதி வெளியிடங்களில் மாஸ்க் அணிவதை வலியுறுத்தும் அரசு தொற்றுப் பரவல் தீவிரமாக அதிகரித்தால் வீட்டிலும் மாஸ்க் அணிவதை கட்டாயப்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

Is it mandatory to wear a mask at home in indiaஇதனிடையே, கொரோனா தொற்றின் பரவும் வேகம் முந்தைய அலையை விட தற்போது பல மடங்கு அதிகரித்து இருப்பதாகவும், பெரும் தொற்றின் தாக்கம் எந்த அளவுக்கு அதிகரிக்கிறது என்பதற்கு காற்று மண்டலத்தில் தூசிகள் மூலமாக எறிதில் பரவுவதே முக்கிய உதாரணமாகும். ஓராண்டு காரமாக கொரோனா நோயாளிகளை கையாண்டு வரும் மருத்துவர்கள், இந்தியா முழுவதும் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிவதை வலியுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.

வீட்டில் ஒருவருக்கு தொற்று உறிதியானால் மற்ற அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு அவர்கள் மாஸ்க் அணிவதை வலியுறத்த வேண்டும் என்றும் , அதனை தாண்டியும் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் அதன் தீவிரம் குறைவாக இருக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

எல்லா நேரங்களிலும் வீட்டில் இருப்பவர்கள் மாஸ்க் அணிந்து கொண்டே இருப்பது நடைமுறையில. சாத்தியமில்லாத ஒன்று என அவசர சிகிச்சை பிரிவின் வல்லுநர் ரேமண்ட் சேவியோ கூறியுள்ளார்.

முன்கள பணியாளர்களுக்கு வேண்டுமானால் அரசின் இந்த உத்தரவுகள் பொருந்தும் என்று கூறப்படுகிறது.

Link Source: https://bit.ly/3t3cjwR