Breaking News

மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு வரும் சர்வதேச பல்கலைக்கழக மாணவர்களுக்கு சனிக்கிழமை வரை அனுமதி : கூடுதல் கட்டுப்பாடுகள் விதித்து ப்ரீமியர் Mark McGowan உத்தரவு

International University students allowed to visit Western Australia until Saturday. Premier Mark McGowan orders additional restrictions

சர்வதேச பல்கலைக்கழகங்களில் தங்கள் படிப்புகளை தொடர விரும்பும் மாணவர்கள் ஆஸ்திரேலியா வந்து அங்கிருந்து மேற்கு ஆஸ்திரேலியா வருகைதருவதற்கான கால அவகாசம் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த வாரம் சனிக்கிழமைக்குள்ளாக மாணவர்கள் அனைவரும் வந்து விட வேண்டும் என்றும் அவர்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதாகவும் ப்ரீமியர் Mark McGowan கூறியுள்ளார்.

சர்வதேச எல்லைகள் திறக்கப்படும்போது மாணவர்களுக்கும் அனுமதி வழங்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது எல்லைகள் திறப்பு தாமதமாவதால் சர்வதேச மாணவர்களுக்கு முதலில் அனுமதி வழங்கப் படுவதாகவும் அதே நேரம் அவர்கள் மேற்கு ஆஸ்திரேலியாவில் தனிமைப்படுத்த படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

International University students allowed to visit Western Australia until Saturday. Premier Mark McGowan orders additional restrictions.மாகாண அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகளின் படி ஆஸ்திரேலியா அல்லது வேறு மாகாணங்களின் வழியாக மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு வரும் சர்வதேச மாணவர்கள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்றும் 14 நாட்கள் அவர்களுக்கு விருப்பப்படும் இடத்தில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து பல்கலைகழகங்கள் மற்றும் நிபுணர்களுடன் கலந்து ஆலோசனை செய்து எடுக்கப்பட்ட முடிவு என்றும், இதன் மூலமாக பல்கலைகழகங்கள் தொற்று பரவல் மையங்களாக மாறாமல் நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அமைச்சர் Rita Saffioti கூறியுள்ளார்.

மேற்கு ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து தங்களது கல்வியைத் தொடர விரும்பும் சர்வதேச மாணவர்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் வருகை தருமாறு கல்வித் துறை அமைச்சரும் அறிவுறுத்தியுள்ளார்.

International University students allowed to visit Western Australia until Saturday, Premier Mark McGowan orders additional restrictionsஇதனிடையே சர்வதேச மாணவர்களுக்கு காலக்கெடு விதித்திருப்பது கண்டனத்திற்கு உரியது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. உரிய காலத்திற்குள் வெவ்வேறுவிதமான அறிவுரைகளை வழங்கி சர்வதேச மாணவர்களை குழப்பத்திற்கு ஆளாகவும் மேற்கு ஆஸ்திரேலிய ப்ரீமியர் Mark McGowan தன்னுடைய மனநிலையை மாற்றிக் கொண்டு மாணவர்களில் விவகாரத்தை கையாள வேண்டும் என்றும் எதிர்க்கட்சி கூறியுள்ளது.

தேவைப்படும் பட்சத்தில் மாணவர்கள் மேற்கு ஆஸ்திரேலிய வந்த பின்னரும் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் அவர்கள் விருப்பத்திற்கு உரிய இடத்தில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற நடைமுறைகள் கட்டாயம் பின்பற்றப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Link Source: https://ab.co/3gkhJQp