Breaking News

உக்ரைனில் அதிபர் செலன்ஸ்கியின் படைபலத்தை அதிகரிக்கும் வகையில் சர்வதேச வீரர்கள் உக்ரைனில் குவிப்பு : ரஷ்யாவுக்கு எதிரான போரில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் சிறப்பு ராணுவ படைகள் உக்ரைனில் முகாம்

International troops concentrate in Ukraine to augment President Zelensky's manpower in Ukraine. Special forces of countries including the United States camp in Ukraine in the war against Russia

உக்ரைன் மீதான போரில் ரஷ்யா தனது படை பலத்தை நிருபிக்கும் வகையில் பல்வேறு தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. ராணுவ படைகளின் முழு திறனையும் உக்ரைனுக்கு எதிராக பயன்படுத்தி வருகிறது.

இந்நிலையில், உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட் மேற்குலக நாடுகள் தங்களது சிறப்பு ராணுவப்படை வீரர்களை உக்ரைனுக்கு அனுப்பி வருகிறது. அதே நேரத்தில் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி வேண்டுகோளை ஏற்று ஏராளமான முன்னாள் வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உக்ரைன் ராணுவத்தில் இணைந்து வருகின்றனர்.

International troops concentrate in Ukraine to augment President Zelensky's manpower in Ukraine. Special forces of countries including the United States camp in Ukraine in the war against Russia.போர்க் குற்றத்தில் ஈடுபட்டு வரும் ரஷ்ய படைகளை முழுமையாக அழிக்கும் வகையில் அனைத்து பகுதிகளில் இருந்தும் வீரர்கள் அணி திரள வேண்டும் என்று உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கேட்டுக் கொண்டுள்ளார். தொடர்ந்து பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசி வீடியோ வெளியிட்டு வரும் செலன்ஸ்கீ, போருக்கு பயந்து தான் எங்கும் ஓடி ஒளியவில்லை என்றும், தான் உயிரிழந்தாலும் உக்ரைன் உறுதியாக எதிர்த்து போராடும் என்றும் கூறியுள்ளார்.

கடந்த வாரம் வரை பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 16 ஆயிரம் வீரர்கள் உக்ரைன் ராணுவத்தில் இணைந்துள்ளதாகவும், சொந்த நாட்டைச் சேர்ந்த ஆண்களும் ராணுவத்தில் இணைந்து ரஷ்யாவுக்கு எதிராக போரிடத் தயராகி வருவதாகவும் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் இடையிலான போரில் தாங்கள் ஜனநாயகத்தின் பக்கம் நின்று போரிட விரும்புவதாகவும், ரஷ்யாவின் படை பலத்தை முற்றிலும் செயலிழக்க செய்யும் வகையில் உக்ரைனின் பதில் தாக்குதல் இருக்கும் என்று படையில் இணைந்துள்ள வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

International troops concentrate in Ukraine to augment President Zelensky's manpower in Ukraine. Special forces of countries including the United States camp in Ukraine in the war against Russia..அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியாற்றிய முன்னாள் வீரர்கள் 20க்கும் மேற்பட்டோரை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் சந்தித்து அவர்களின் ராணுவத்தில் இணைந்து தொடர்பாக நேர்காணல் செய்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டு வருவதாகவும், இது உள்நாட்டு மக்களை அகதிகளாக மாற்றும் மோசமான நடவடிக்கை என்றும் உக்ரைன் ராணுவத்தில் இணைந்துள்ள முன்னாள் வீரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

‘Have Gun, will Travel’ என்ற பேஸ்புக் மற்றும் WhatsApp சமூக வலைதள பக்கங்களை உருவாக்கி அதன் மூலம் முன்னாள் ராணுவ வீரர்களை ஒருங்கிணைத்து வருவதாகவும், உடலில் பொருத்தி இயக்கும் வகையிலான ஆயுதங்கள் இரவுநேர பயன்பாட்டிற்கு உதவும் கண்ணாடிகள் மற்றும் கைத்துப்பாக்கிகள் உள்ளிட்ட வற்றை பரிமாறிக் கொள்வது மற்றும் பயன்படுத்துவது குறித்து இந்தக் குழுக்களில் தெரிவிக்கப்படுதாகவும் ராணுவ வீரர்கள் கூறியுள்ளனர்.

Link Source: https://ab.co/3669wNC