Breaking News

ஆஸ்திரேலியர்களுக்கான சர்வதேச பயணம் 2024 வரை தடை செய்யப்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச எல்லைகள் படிப்படியாக திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மோரிசன் அரசாங்கத்தின் கொரெனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தப்படும் திட்டத்தில் கடந்த வார இறுதியில் ஒழுங்கற்றநிலை நிலவி வந்ததது. இந்நிலையில், Deloitte Access Economics காலாண்டு வணிகப்பார்வை குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

International travel for Australians have been warned to be banned until 2024.அந்த அறிக்கையில், 2024ம் ஆண்டு வரை ஆஸ்திரேலியர்களுக்கான சர்வதேச பயணம் தடை செய்யப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Deloitte-ன் பொருளாதார அறிஞர் கிறிஸ் ரிச்சர்ட்சன் ஆஸ்திரேலியாவுக்கு வரும் பயணிகளுக்கு சில காலம் தனிமைப்படுத்துதலை கட்டாயம் தொடரவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு வருகை மற்றும் வெளிநாட்டு பயணத்தை 2022ம் ஆண்டு வரை மிகவும் பலவீனமாக வைத்திருக்கும் என்றும், 2024 வரை தொற்றுப்பரவலின் முந்தைய நிலைக்கு திரும்ப வாய்ப்பில்லை என்றும் கிறிஸ் ரிச்சர்ட்சன் தெரிவித்துள்ளார்.

AstraZeneca vaccineரத்தம் உறைதல் காரணமாக 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே அஸ்ட்ராசெனகா தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துட்ட நிலையில், சர்வதேச விமானங்களை இயக்கும் முடிவை விமான நிறுவனங்கள் நிறுத்தி வைத்துள்ளன.

இந்நிலையில், அரசு 20 மில்லியன் பைசர் தடுப்பூசிகளை வாங்கி உள்ளது. இவை இந்த ஆண்டு இறுதிக்குள் கப்பல்கள் மூலமாக வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு உலகநாடுகளில் தடுப்பூசி சிறப்பான முறையில் செயல்படுவதாகவும், கூடுதலாக செலவு செய்து தடுப்பூசியை வாங்குவதற்கு அரசுகள் தயார் நிலையில் இருப்பதாகவும் ரிச்சர்ட்சன் கூறியுள்ளார். மேலும், மத்திய வங்கிகளிடம் இருந்து கடன் பெற்று இன்னும் பல மடங்கு வேகமெடுக்க வேண்டும் என்றும், ஆனால், எதார்த்த நிலை நேர்மாறாக மிக வேகமாக சென்றுகொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் பொருளாதார நிலை மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருப்பதாகவும், ரிசர்வ் வங்கியை போல வட்டிவிகிதத்தை உயர்த்தும் முடிவை சில ஆண்டுகாலம் தள்ளிப்போகும் என்றும் கூறியுள்ளார். வேலை இழப்பு, ஊதியக்குறைப்பு தொடர்பான நடவடிக்கைகள் மிகக் குறைவான வேகத்திலேயே சென்று கொண்டிருப்பதால் அது தொடர்பான அச்சுறுத்தல்கள் தொடரும் என்றும், பல நிறுவனங்கள் மூடப்படும் நிலை உருவாவதால் வேலையின்மை சதவிகிதம் 6 ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுதாகவும் ரிச்சர்ட்சன் தனது அறிக்கையின் வாயிலாக குறிப்பிட்டுள்ளார்.