Breaking News

வெளிநாடுகளுக்கு மக்கள், சுற்றுலா பயணிகள் சென்று வரும் பொருட்டு ஆஸ்திரேலியாவில் சர்வதேச விமான போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

International flights are permitted in Australia for the purpose of traveling overseas.

கடந்த 2020-ம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து வருகிறது. இதை தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து ஆஸ்திரேலியாவுக்குள் விமானங்கள் வருவதற்கும், உள்நாட்டில் இருந்து விமானங்கள் வெளியே செல்வதற்கும் தடைகள் விதிக்கப்பட்டன.

International flights are permitted in Australia for the purpose of traveling overseas..இந்நிலையில் வரும் பிப்ரவரி 21-ம் தேதி முதல் அனுமதி பெற்றுள்ள பயணிகள் விமானம் மூலம் வெளிநாடுகளுக்கு செல்லலாம் என பிரதமர் ஸ்காட் மோரீசன் தெரிவித்துள்ளார். அதற்கான சில வழிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். அதன்படி வெளிநாடு செல்ல விரும்புவோர் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திருக்க வேண்டியது முக்கியம். ஆஸ்திரேலியாவில் குடியுரிமை பெற்றவர்கள், நிரந்தர குடியுரிமை பெற்றவர்கள் அவர்களுடைய குடும்பத்தினர் மட்டுமே ஆஸ்திரேலியாவுக்குள் வருவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

ஒருவேளை தடுப்பூசி செலுத்திக்கொள்ள முடியாது என்றால் அதற்கான மருத்துவச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இதற்கிடையில் ஆஸ்திரேலியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வெளிநாடு செல்வதற்கான தடை தொடரும் என உள்துறை அமைச்சர் கேரன் ஆண்ட்ரூஸ் தெரிவித்துள்ளார்.

Link Source: https://ab.co/3B5uPdH