Breaking News

பெண்கள் உடல் எடை குறைய இதை செய்தால் போதும். உடனடி தீர்வு !

Instant solution for women to lose weight

• இன்றைய காலத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் எடை அல்லது ஊளைச் சதை உடம்பு ஆகும். ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, கொழுப்பு நிறைந்த உணவு, போதிய உடல் உழைப்பு இன்மை, அதிக நேரம் தொலைக்காட்சி முன்பு அமர்வது, பகலில் அதிக நேரம் தூங்குவது போன்றன இதற்கு முக்கியக் காரணமாக அமைகின்றது.

• இன்றைய காலத்தில் உடல் எடையைக் குறைப்பது எளிதான ஒன்று தான். உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகியவற்றை தாண்டி, உடல் எடையைக் குறைக்க சில யுக்திகளை கையாள வேண்டும்.

weight loss• சிலருக்கு கொஞ்சமாக உடல் எடை கூடினாலும் கூட மன அழுத்தம் வந்துவிடும். அல்லது மன அழுத்தம் வருவதால் உடல் எடை கூடும் அபாயம் உள்ளவர்களும் இருக்கிறார்கள். வயிற்றில் இருக்கும் தேவையற்ற கொழுப்பை குறைத்தால் போதும்.

• ஒரு நாளைக்கு ஒருவர் 7 மணி நேரம் தூங்கும் போது மன அழுத்தம் குறைய துவங்குகிறது. ஆரோக்கியமான மாற்றங்கள் உங்களுக்கு தெரிய வரும். அதனால் உடல் எடையை குறைப்பதற்கு நீங்கள் நிச்சயம் ஏழு மணி நேரம் தூங்கியே ஆக வேண்டும்,

• பலர் உடல் எடையை குறைக்க உணவு உண்ணாமல் இருந்தால் சரி ஆகிவிடும் என்று நினைக்கின்றார்கள். ஆனால் அது அப்படி அல்ல. நீங்கள் உணவை உண்ணாமல் விட்டால் அதிகமாக உணவை அடுத்தடுத்த வேலைகளில் உட்கொள்ள நேரிடும். குறைந்த கலோரிகள் கொண்டிருக்கும் உணவுகளை நன்றாக மென்று உண்ணுங்கள்.

• முதலில் கலோரி பானமாக எடுத்துக்கொள்ளாதீர்கள். அதாவது டீ, காபி, ஜூஸ் உள்ளிட்ட சர்க்கரை கலந்த பானங்கள், ஆல்கஹால் உள்ளிட்ட மது பானங்கள் உள்ளிட்டவற்றை எடுத்துக்கொள்ளவே கூடாது. தெரிந்தோ தெரியாமலோ இதனைக் குடிப்பதனால் அதிகப்படியான கலோரிகளை நாம் உட்கொள்கிறோம். அதற்கு பதிலாக சர்க்கரை கலக்காத காய்கறி ஜூஸ், மோர், எலுமிச்சை ஜூஸ் முக்கியமாகத் தண்ணீர் அதிகமாக உட்கொள்ளலாம்.

• அடுத்தது சாப்பிட்டு கொண்டே இருக்கக் கூடாது. எந்நேரமும் கணினி முன்பு உட்கார்ந்திருப்பவர்கள், நிச்சயம் அவர்களை அவ்வப்போது ரிலாக்ஸ் செய்துகொள்வது முக்கியம். வீட்டிலிருந்து வேலை செய்பவர்கள் மாடிப்படிகளை அவ்வப்போது ஏறி இறங்கலாம். வெளியே எங்கேயாவது சென்றால் முடிந்த வரை நடந்து செல்ல முயற்சி செய்யுங்கள். முக்கியமாக போன் பேசும்போதெல்லாம் நடந்துகொண்டே பேசலாம். இப்படிச் செய்வதனால் உடலில் அதிகப்படியான கலோரிகளை அழிக்க முடியும்.

Instant solution for women to lose weight 1• 80 சதவிகிதம் சரியான உணவு பழக்கத்தைப் பின்பற்றினால், 20 சதவிகிதம் உங்களுக்கு பிடித்தவற்றை சாப்பிடலாம். அதாவது நிறையப் புரதம், கீரை மற்றும் ஃபைபர் உணவுகளை எடுத்துக்கொண்டு, வெறும் 20 சதவிகித அளவு உங்களுக்குப் பிடித்த ஐஸ் க்ரீம், பிட்ஸா உள்ளிட்ட விருப்பமான உணவுகளைச் சாப்பிடலாம். நூறு சதவிகிதம் கொழுப்பு நிறைந்த உணவுகளை எடுத்துக்கொண்டால்தான் பிரச்சனையே. அதை செய்யவே செய்யாதீர்கள். ஜங்க் உணவுகளை வாங்கவே வாங்காதீர்கள். திரும்பத் திரும்ப வாங்கி தவறு செய்யாதீர்கள். பிறகு எடை குறையவே குறையாது.

3 l water• தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் குடித்தால், உடல் வறட்சியில்லாமல் இருப்பதோடு, உடலில் தங்கியிருக்கும் நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும். மேலும் அவ்வப்போது சீரான இடைவெளியில் தண்ணீர் குடித்தால், உடலின் மெட்டபாலிசமானது அதிகரிக்கும். இதனால் வயிற்றைச் சுற்றி காணப்படும் தொப்பையும் குறைந்துவிடும்.

• வயிற்றைச் சுற்றி தொப்பையை ஏற்படுவதற்கு, சர்க்கரையும் ஒரு காரணம். எனவே உண்ணும் உணவுப் பொருளில் சர்க்கரைக்கு பதிலாக தேனை சேர்த்துக் கொண்டால், தொப்பையை குறைவதோடு, உடல் எடையும் குறையும்.

• உடலுக்கு ஆரோக்கியமான கொழுப்புக்கள் கிடைக்க வேண்டியது மிகவும் இன்றியமையாதது. அத்தகைய கொழுப்புக்கள் நட்ஸில் அதிகம் உள்ளது. எனவே ஸ்நாக்ஸ் நேரத்தில் வால்நட், பாதாம், வேர்க்கடலை போன்றவற்றை சாப்பிடுவது மிகவும் நல்லது.

• வயிற்றைச் சுற்றியிருக்கும் தொப்பையை குறைக்க ஒரே சிறந்த வழியென்றால், தினமும் காலையில் எலுமிச்சை சாறு போட்டு குடிப்பது தான். அதிலும் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி, அதில் சிறிது உப்பு மற்றும் தேன் சேர்த்து குடித்தால், நிச்சயம் தொப்பை குறையும்.

leave a reply