Breaking News

தடுப்பூசி செலுத்தி கொள்ளாத சுகாதாரப் பணியாளர் மூலம் பரவிய தொற்று : நியூ சவுத் வேல்ஸ்-ல் மேலும் 24 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி

Infection transmitted by non-vaccinated healthcare workers

ஆஸ்திரேலியாவில் புதிய வகை வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில் பல்வேறு மாகாண தலைநகரங்கள் மற்றும் ஊரக பகுதிகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தொற்று பரவும் அபாயம் உள்ள இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு வந்து சென்றவர்கள் அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் உடனடியாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

Infection transmitted by non-vaccinated healthcare workers.இந்நிலையில் முதியோர் பராமரிப்பில் பணியாற்றும் சுகாதார பணியாளர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தடுப்பூசி எடுத்துக்கொள்ளாத நிலையில் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவரோடு தொடர்பில் இருந்த மேலும் சிலருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் தொற்று உறுதியானது. இதனையடுத்து சிட்னியின் வடக்குப் பகுதியில் 24 பேருக்கு ஒரே நாளில் தொற்று பாதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து ஜூன் 16-ம் தேதியில் இருந்து தற்போது வரை 195 புதிய வகை வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தலைமை சுகாதார அதிகாரி டாக்டர். Kerry Chant
கூறியுள்ளார். Royal North Shore மருத்துவமனை மற்றும் Fairfield ஆகிய இரண்டு மருத்துவமனைகளிலும் பணியாற்றிய 24 வயது பெண் பயிற்சி செவிலியர் ஒருவருக்கு தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட நிலையில், அவரோடு தொடர்பில் இருந்த சுகாதார பணியாளர் சிலருக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் அவரோடு தொடர்பில் இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உட்பட 200 சுகாதாரப் பணியாளர்கள் கண்டறியப்பட்டு அவர்களை தனிமைப்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Infection transmitted by non-vaccinated healthcare workers,.சுகாதாரத் துறையின் ஆய்வில் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 24 பேரும் தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்கள் என்பது தெரிய வந்துள்ளதாக தலைமை சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்கள் இதுவரை இரண்டு லட்சம் பேர் தடுப்பூசி எடுத்துக்கொண்டு உள்ளதாகவும் டாக்டர். Kerry Chant தெரிவித்துள்ளார்.

சிட்னியில் அமைக்கப்பட்டுள்ள ஒலிம்பிக் பார்க் தடுப்பூசி மையத்தில் வந்து தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட நபர் ஒருவருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் நியூ சவுத் வேல்ஸ்-ல் தடுப்பூசி மையங்கள் அனைத்தும் சுத்தமாக பராமரிக்க படுவதாக டாக்டர். Kerry Chant கூறியுள்ளார்.

இந்நிலையில் ஊரடங்கு நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும், மக்கள் பெருமளவில் வெளியே வருவதன் காரணமாக இருப்பவைகளை கட்டுப்படுத்த இயலாத நிலை இருப்பதாக நியூ சவுத் வேல்ஸ் பிரீமியர் Gladys Bereijiklian கூறியுள்ளார். தடுப்பூசி நடவடிக்கைக்கு முன்னதாக ஊரடங்கு மூலமாக மட்டுமே தொற்றுப் பரவலை கட்டுபடுத்த முடியும் என்றும், புதிய வகை வைரஸ் பாதிப்பால் பெருமளவு பாதிப்பை சந்திக்க நேரிடும் என்று மருத்துவ வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் ப்ரீமியர் தெரிவித்துள்ளார்.

நிலையில் சிட்னி, நியூ சவுத் வேல்ஸ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரிசோதனை எண்ணிக்கையை தீவிரப்படுத்தி கட்டுப்பாடுகளை அதிகரித்து வருகிறது அம்மாகாண அரசு.

Link Source: https://ab.co/3hp1Rfz