Breaking News

கொரோனாவுக்கு சிலை வைத்து கோவில் கட்டி வழிபட்ட கோவையில் உச்சத்தில் தொற்று பாதிப்பு : ஹாட்ஸ்பாட்டாக மாறிய கோவைக்கு சிறப்பு அதிகாரிகளை நியமித்து முதலமைச்சர் உத்தரவு

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் தொற்று பாதிப்பு குறைந்தாலும் உயிரிழப்பு எண்ணிக்கை குறையாமல் உள்ளது. மிக அதிக அளவிலான தொற்று பாதிப்பு எண்ணிக்கையோடு முதலிடத்தில் இருந்த சென்னையில் பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது.

அதே நேரம் மற்ற மாவட்டங்களைப் பொருத்தவரை கோவையில் கடந்த சில தினங்களாக தொற்று பாதிப்பு உச்சத்தை தொட்டு வருகிறது. நான்காயிரத்திற்கும் அதிகமாக தொற்று பாதிப்பு பதிவாகி வருகிறது. இன்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 784 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே தொற்று பாதிப்பு அதிகமுள்ள கோவை, ஈரோடு, திருச்சி, திருப்பூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் குறிப்பிட்ட மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தி பெற்று பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார். ஆக்சிஜன் படுக்கைகள், உயிர்காக்கும் மருந்துகள் உள்ளிட்டவற்றை தயார்படுத்துமாறும் கூறியுள்ளார்.

Infection at the peak of Coimbatore, where the temple was built with a statue of Corona Chief Minister orders appointment of special officers to Coimbatore which has become a hotspotஇதனிடையே தமிழகத்தில் இன் ஒரே நாளில் 33 ஆயிரத்து 361 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 474 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தொடர்ந்து உயிரிழப்பு எண்ணிக்கை குறையாமல் உள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் தொடர் பாதிப்பு குறைந்து 2 ஆயிரத்து 779 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 30 ஆயிரத்து 63 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பெரும்பாலான இடங்களில் மக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுச் செல்கின்றனர். இது தொடர்பாக உரிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்டோருக்கு முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.

Link Source: https://bit.ly/3fuIbqE