Breaking News

Northern Territory -ல் விசாரணையின் போது பழங்குடியின இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் : சிறப்பு காவல் படையில் இருந்த காவல் அதிகாரி நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

Indigenous youth shot dead during interrogation in Northern Territory. A police officer from the Special Forces testified in court.

போலீஸ் கான்ஸ்டபிள் Zachary Rolfe டிபன்ஸ் வழக்கு தொடர்பாக உதவிகரமாக ஆவணங்களை தயாரித்து கொடுத்ததாக குற்றச்சாட்டு இருந்த நிலையில் அதனை முற்றிலுமாக மறுத்துள்ளார் சிறப்பு காவல் படையில் இருந்த போலீஸ் அதிகாரி James Kirstenfeldt.

பழங்குடியின இளைஞர் Kumanjayi Walker சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் அங்கு சம்பவத்திற்கு பிறகு எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் நீதிமன்றத்தில் சாட்சியமாக அளிக்கப்பட்டன.

Indigenous youth shot dead during interrogation in Northern Territory.. A police officer from the Special Forces testified in court.விசாரணைக்கு ஒத்துழைக்காமல் காவல்துறையினர் மீது கத்தரிக்கோலை குத்தி தாக்குதல் நடத்திய பின்னரே தற்காப்புக்காக பழங்குடியின இளைஞரை சுட்டதாகவும் இந்த விவகாரத்தில் பல்வேறு தரப்பு சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில் போலீஸ் கான்ஸ்டபிள் Zachary Rolfe மீது எந்தவித குற்ற முகாந்திரமும் இல்லை என்று நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதே நேரத்தில் சட்டபூர்வமாக வழக்கு விசாரணையின் போக்கு குறித்து தொடர்புடைய பல்வேறு அதிகாரிகளிடம் தொடர்ந்து நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது.

கைது நடவடிக்கை தொடர்பான விரிவான விவரங்கள் மின்னஞ்சல் மூலமாக ஐஆர்டி உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டு இருந்ததாகவும், அதன் அடிப்படையிலேயே கைது நடவடிக்கையை திட்டமிட்டிருந்ததாகவும் சிறப்பு படையில் இடம் பெற்றிருந்த காவலர் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.

Indigenous youth shot dead during interrogation in Northern Territory.., A police officer from the Special Forces testified in court.குற்றம்சாட்டப்பட்ட போலீஸ் கான்ஸ்டபிள் Zachary Rolfe -ஐ காப்பாற்றும் வகையில் சாட்சியம் அளிக்கிறீர்களா என்று நீதிபதி கேள்வி எழுப்பிய நிலையில், மின்னஞ்சலில் இருந்த முழுமையான விவரங்கள் குறித்து தன்னால் நினைவுபடுத்த முடியவில்லை என்றும் எனவே இதில் தான் காப்பாற்றும் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்றும் James Kirstenfeldt திட்டவட்டமாக மறுத்தார்.

இதனை அடுத்து James Kirstenfeldt துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்து முடிந்த பின்னர் உடலில் கட்டப்பட்டு இருந்த கேமராவில் மூலம் பதிவான காட்சிகளும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. வீடியோ காட்சிகள் மற்றும் அதில் பதிவாகியுள்ள குரல்கள் குறித்தும் நீதிமன்றம் விரிவாக ஆய்வு செய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

ஐஆர்டி உறுப்பினர்கள் மற்றும் அவர்களோடு தொடர்புடைய விசாரணை அதிகாரிகள் என மேலும் சிலரை தொடர்ந்து நீதிமன்றம் விசாரிக்கும் என்றும் அவர்கள் அடுத்தடுத்த நாட்களில் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

Link Source: https://ab.co/34OaTjW