Breaking News

மேற்கு ஆஸ்திரேலியாவில் பூர்வக்குடி பெண் கொல்லப்பட்ட விவகாரம் : வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரிகள் குற்றமற்றவர்கள் என பெர்த் நீதிமன்றம் தீர்ப்பு

2019ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி மேற்கு ஆஸ்திரேலியாவின் Geraldton ஊரக பகுதியில் நடைபெற்ற சம்பவம் ஒன்றில் Noongar – Yamatji பூர்வகுடி பெண்ணான JC – யை காவல்துறையினர் துரத்திச் சென்று துப்பாக்கியால் சுட்டதில் அவர் உயிரிழந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நீண்டகாலமாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பெண்ணின் தாயார் பல்வேறு சிசிடிவி ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

Indigenous woman murdered in Western Australia. Perth court finds police officers not guilty.இந்த வழக்கில் 12 நீதிபதிகள் கொண்ட உயர்மட்ட சாசன அமர்வு கடந்த மூன்று வாரங்களாக 60க்கும் மேற்பட்ட சாட்சியங்களை விசாரித்து வந்தது. அதே நேரத்தில் ஜெஸ்ஸியின் தாயார் பதிவு செய்த சிசிடிவி ஆதாரங்கள் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 65 மீட்டருக்கு மேல் தொலைவாக இருந்ததாகவும் அதில் தெளிவான காட்சிகள் எதுவும் பதிவாகவில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதேபோன்று வழக்கில் சம்பந்தப்பட்ட காவலர்கள் தங்களது தற்காப்புக்காக துப்பாக்கி சூடு நடத்தியதாகவும், பூர்வகுடி பெண் JC – கையில் கத்தி வைத்திருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனவே குற்றம் சாட்டப்பட்ட காவல் அதிகாரிகள் குற்றமற்றவர்கள் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Indigenous woman murdered in Western Australia. Perth court finds police officers not guilty,,குறிப்பிட்ட சம்பவம் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்னதாகவே அவர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டதாகவும், மனநலம் தொடர்பான சிக்கல்கள் JC க்கு இருந்ததாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் சம்பவம் நடந்த அன்று காலை அப்பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் மதுபானத்தை திருடியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு கடை ஒன்றில் JC மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இறுதி தீர்ப்பு வாசிக்கும் நீதிமன்றத்தின் அறையில் காவல் அதிகாரிகளின், JC உறவினர்கள் உள்ளிட்ட அனைவரும் இருந்தனர். 12 நீதிபதிகள் கொண்ட அமர்வு மூன்று மணி நேரத்திற்கும் மேலாக வழக்கு தொடர்பான விவரங்களை வாசித்து குற்றம் சாட்டப்பட்ட காவலர்கள் குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பளித்தது.

Link Source: https://bit.ly/3EaKLfa