Breaking News

உக்ரைன் விவகாரத்தில் இந்தியா எடுத்த மாறுபட்ட நிலைப்பாடு : மெல்போர்னில் நடைபெற்ற குவாட் பிரதிநிதிகள் சந்திப்பில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் ஒருமித்த கருத்து

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு விவகாரத்தில் அமெரிக்கா மிகத் தீவிரமாக செயலாற்றி வரும் நிலையில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் குவாட் நாடுகளின் பிரதிநிதிகள் சந்திப்பு நடைபெற்றது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் ஒருமித்த கருத்தை நிலைப்பாடாக மேற்கொண்ட நிலையில் இந்தியா உக்ரைன் விவகாரத்தில் அமைதி காத்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் அத்துமீறலை கண்டிக்கும் வகையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தங்களது கவனத்தை உக்ரைன் மீது குவித்து வரும் நிலையில் இந்தியா சார்பில் பங்கேற்ற வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இதுதொடர்பான பேச்சுவார்த்தையின்போது மௌனமாக இருந்தார்.

இதை அடுத்து பேசிய, உக்ரைன் எல்லையில் ரஷ்யாவின் படைகள் குவிக்கப்பட்டிருப்பது கவலையை ஏற்படுத்துகிறது என்று கூறிய ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் Marise Payne, உக்ரைனின் இறையாண்மையை காக்க முழுமையான ஆதரவை தங்களின் நாடு வழங்கும் என்றும் கூறினார்.

இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு தொடர்ந்து ஜப்பானால் ஆதரிக்கப்படுவதாகவும், குவாட் ஆலோசனைக் கூட்டத்தில் உக்ரைன் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் ஜப்பானின் வெளியுறவுத்துறை அமைச்சர் Yoshimasa Hayashi கூறினார்.

India's divergent stance on Ukraine. US, Australia, Japan and other countries reach a consensus at the Quad delegation meeting in Melbourne.இந்தியா – மியான்மர் எல்லையில் கிளர்ச்சியின் காரணமாக ஏற்பட்டுள்ள சவாலை சுட்டிக்காட்டிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், போராட்டக்காரர்கள் நடத்திய கிளர்ச்சியில் உயிரிழந்த கர்னல் மற்றும் அவரின் குடும்பத்தினர் குறித்து மேற்கோள் காட்டினார். ஆனாலும், இந்தியா தேசிய அளவில் மற்ற நாடுகள் மீது விதிக்கப்படும் தடைகளுக்கு எதிரானது என்று குறிப்பிட்டார்.

இந்த விவகாரத்தில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் கவனமாக கண்காணித்து வருவதாகவும் இந்தியா குறிப்பிடும் பொருளாதார தடை விவகாரத்தில் அமெரிக்காவின் அணுகுமுறை மாறுபட்டது என்றும் குவாட் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற வெளியுறவுத்துறை அமைச்சர் பிளிங்கன் கூறியுள்ளார்.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நாடுகள் கடுமையாக கண்டிப்பதாகவும் அதற்கான ஒருமித்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தாங்கள் உறுதிபூண்டு இருப்பதாகவும் கூறியுள்ளனர். பங்கரவாத தாக்குதல்களை தடுத்து நிறுத்துவதற்கான எளிய வழிகளை தொழில்நுட்ப ரீதியாகவும் பல ரீதியாகவும் மேற்கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாடுகள் மேற்கொள்ளும் என்றும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் உறுதி செய்துள்ளனர்.

Link Source: https://ab.co/36d5iUI