Breaking News

3,14,835 தொற்றாளர்கள் கண்டறியட்டதன் மூலம் ஒரே நாளில் அதிக கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திற்கு வந்துள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 3,14,835 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. நாடுமுழுவதும் 2104 பேர் ஒரே நாளில் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் கடந்த ஜனவரி மாதம் ஒரே நாளில் 297,430 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதுவே உலகளவில் ஒரு நாள் பாதிப்பில் அதிகபட்சமாக இருந்து வந்தது.

India tops list of countries with highest number of corona in a single day with 3,14,835 casesகொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ளதால் பல மாநிலங்களில் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உத்தரபிரதேசம், குஜராத், மகாராஸ்டிரா போன்ற மாநிலங்களில் போதிய மருத்துவ கட்டமைப்புகள் இல்லததாலும், ஆக்சிஜன் பற்றாக்குறையாலும் பலர் உயிரிழந்து வருகின்றனர். மகாராஷ்டிரா ஜாகீர் ஹூசைன் மருத்துவமனையில் ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட கசிவு 22 பேர் உயிரிழந்தனர்.

இவ்விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக மாநில முதல்வர் உத்தவ் தாக்ரே தெரிவித்துள்ளா.

இதே போல பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுவதாக மாநில அரசுகள் பகிரங்கமாக அறிவித்துள்ளன.

இந்தியாவில் இதுவரை சுமார் ஒன்றைரை கோடி பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது வரை கொரோனா தொற்றுக்கு 1,84,657 பேர் உயிரிழந்துள்ளனர்.

Link Source: https://cutt.ly/nv8J1wm