Breaking News

ஆஸ்திரேலியாவில் பெருந்தொற்று காலத்தில் அதிகரிக்கும் வேலைப் பளு : முதியோர் பராமரிப்பு பணியில் நெருக்கடி காரணமாக பலர் வெளியேறும் சூழல்

Increasing workload during the epidemic in Australia. The environment in which many people leave due to the crisis in geriatric care

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மற்றும் ACT உள்ளிட்ட மாகாணங்களில் முதியோர் பராமரிப்பு பணியில் ஈடுபடுவோரின் பணி நேரம் கடுமையாக உயர்ந்துள்ளது. கோவிட் 19 – பெருந்தொற்று காலத்தில் இது பன்மடங்கு உயர்ந்துள்ளதால் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ள பணியாளர்கள் வேலையை விட்டு வெளியேறும் நிலைக்கு வந்துள்ளதாக இத்துறையில் 35 ஆண்டுகளாக பணியாற்றி வரும் Warrigal அமைப்பின் தலைமை அதிகாரி Mark Sewell கூறியுள்ளார்.

Increasing workload during the epidemic in Australia. The environment in which many people leave due to the crisis in geriatric care.15 நாட்களில் சராசரியாக 184 மணி நேரம் பராமரிப்பு செவிலியர்கள் பணியாற்ற வேண்டிய சூழல் இருப்பதாகவும், இது முந்தைய காலங்களில் இல்லாத நெருக்கடி நிலை Mark Swell தெரிவித்துள்ளார். 280 பராமரிப்பு மையங்களில் பணியாற்றி வந்த 250 பணியாளர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாகவும், வீட்டில் இருந்து பணியாற்றும் நபர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் என நாடு முழுவதும் 10 ஆயிரம் பேரை தொற்று உறுதி செய்யப்பட்டதாக Mark Swell கூறியுள்ளார்.

இந்நிலையில் முதியோர் பராமரிப்பு மையங்களில் பூஸ்டர் டோஸ் தடுப்பு ஊசி செலுத்துவதற்கு முன்னதாக தோற்று பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக முதியோர் பராமரிப்பு சேவை துறை அமைச்சர் Richard Colbeck கூறியுள்ளார்.

மற்ற மாகாணங்களில் இருந்து முழுமையான புள்ளிவிவரங்கள் பெறுவதற்கு கால தாமதம் ஏற்படுவதாகவும் அவை அனைத்தும் கிடைத்த பிறகு விரிவான விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பராமரிப்பு பயிர்களில் உள்ள முதியோர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாகவும், அனைவருக்கும் விரைந்து பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

Increasing workload during the epidemic in Australia. The environment in which many people leave due to the crisis in geriatric care,.அதே நேரத்தில் பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட பணியாளர் பற்றாக்குறை காரணமாக தற்காலிக பணியாளர்களை நியமித்து அதற்கு 100 மில்லியன் டாலர்கள் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், மாகாணங்களில் ஏற்படும் பணியாளர் பற்றாக்குறையை விரைந்து சரிசெய்வதற்கான நடவடிக்கையும் இதன்மூலம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் முதியோர் பராமரிப்பு சேவை துறை அமைச்சர் Richard Colbeck கூறியுள்ளார்.

பல்வேறு மாகாணங்களில் எல்லைகள் மூடப்பட்டு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அமலில் உள்ள நிலையில் குடும்பத்தினர் யாரும் வந்து பார்க்காத சூழலில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை இழந்ததாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் முதியோர் பராமரிப்பு மையங்களில் பணியாற்றும் பணியாளர்கள் தங்கள் சொந்த காரணங்களுக்காக வெளியில் செல்லமுடியாத அளவுக்கு நெருக்கடி நிலையில் பணியாற்றிக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Link Source: https://ab.co/34xF2Du