Breaking News

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் தொற்று பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு : ஒரே நாளில் 13 பேர் உயிரிழந்த 37 ஆயிரத்து 994 பேருக்கு வைரஸ் பாதிப்பு

Increase in the number of hospital admissions due to infection in the state of Victoria in Australia. 37 thousand 994 people infected with the virus in 13 deaths in a single day

விக்டோரியா மாகாணத்தில் டெல்டா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், ஒரே நாளில் 37 ஆயிரத்து 994 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், சிகிச்சை பெற்று வந்த 13 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் கடுமையாக உயர்ந்து வருகிறது. தற்போது வரை 861 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக விக்டோரியா ப்ரீமியர் டேனியல் ஆன்ட்ருஸ் தெரிவித்துள்ளார். அவர்களில் 117 தீவிர சிகிச்சை பிரிவிலும், 27 பேர் செயற்கை சுவாசம் பெற்று வருகின்றனர்.

இதற்கு முன்னதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அதிக அளவாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 851 பேராக இருந்த நிலையில், தற்போது அது 861ஆக உயர்ந்துள்ளதாக ப்ரீமியர் கூறியுள்ளார். மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மிக தீவிரமாக உயர்ந்து வருவதால் மருத்துவமனைகளில் படுக்கைகள், வென்டிலேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுவதாகவும் ப்ரீமியர் டேனியல் ஆன்ட்ருஸ் தெரிவித்துள்ளார்.

Increase in the number of hospital admissions due to infection in the state of Victoria in Australia. 37 thousand 994 people infected with the virus in 13 deaths in a single day.விக்டோரியா மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவதுடன் தடுப்பூசி செலுத்துவது, அறிகுறிகள் இருந்தால் தனிமைப்படுத்திக் கொள்வது, உரிய நேரத்தில் பரிசோதனைகள் மேற்கொள்வது என அனைத்தையும் செய்யும் பட்சத்தில் தொற்றுப்பரவல் எண்ணிக்கையை குறைக்கலாம் என்றும், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறையும் என்றும் ப்ரீமியர் டேனியல் ஆன்ட்ருஸ் கூறியுள்ளார்.

ஒரே நாளில் 13 பேர் உயிரிந்த நிலையில் தற்போது வரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 771 ஆக அதிகரித்துள்ளது. நாளொன்றுக்கு 20 ஆயிரம் வரை ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனைகள் வீடுகளிலேயே மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்யப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் தகுதியானவர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி வருவதாகவும், இதுவரை 17 சதவீதம் பேர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டு இருப்பதாகவும் ப்ரீமியர் டேனியல் ஆன்ட்ருஸ் கூறியுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஆம்புலன்ஸ் கிடைக்காமல் அவதிப்படும் மக்கள், அவசர தேவை இருந்தால் மட்டுமே அழைக்குமாறு தொலைபேசி எண்களை ஆம்புலன்ஸ் விக்டோரியா அமைப்பு வெளியிட்டுள்ளது.

Link Source: https://ab.co/3qgBD4x

leave a reply