Breaking News

மேற்கு ஆஸ்திரேலியாவில் கொரோனா முன்னெச்சரிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த நபர் ஒருவர் விடுதியில் இருந்த போர்வைகளை பயன்படுத்தி ஜன்னல் வழியாக தப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

In Western Australia the Corona precautionary isolation of a person escaping through a window using blankets in a hotel has caused a stir

குயின்ஸ்லாந்து மாகாணத்தை சேர்ந்த 39 நபர் ஒருவர் மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த் நகருக்கு வந்துள்ளார். ஆனால் அவர் G2G பாஸ் பெறவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் மாகாணத்திற்குள் நுழைய வழங்கப்படும் அவசர கால அனுமதியை பெறுவதற்கான நிபந்தனையை அவர் பூர்த்தி செய்யவில்லை என்பதால் அவரை மீண்டும் குயின்ஸாலாந்து அனுப்ப முடிவு செய்தனர்.

In Western Australia the Corona precautionary isolation of a person escaping through a window using blankets in a hotel has caused a stir.அடுத்த நாள் விமானத்தில் திருப்பி அனுப்ப முடிவு செய்திருந்த அதிகாரிகள், அதுவரை பெர்த் நகரத்தில் இருந்த ஒரு விடுதியில் 4வது மாடியில் தனிமைபடுத்தியிருந்தனர். ஆனால் தனிமைபடுத்தப்பட்ட விடுதியின் அறியில் இருந்த படுக்கைவிரிப்புகளையும், போர்வைகளையும் பயன்படுத்தி அந்த நபர் ஜன்னல் வழியாக தப்பியுள்ளார்.

In Western Australia the Corona precautionary isolation of a person escaping through a window using blankets in a hotel has caused a stir,4வது மாடியில் இருந்த தப்பிய அந்த நபரை 8 மணி நேரத்திற்கு பிறகு காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் கட்டுப்பாட்டை மீறி வெளியே சென்றதற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறை, அவரை கைது செய்து தனிமை சிறையில் அடைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் ஜாமீன் கோரவில்லை என்பதால், நீதிமன்ற அனுமதியுடன் அவர் ஆகஸ்ட் முதல் வாரம் வரை சிறையில் அடைக்கப்படுவார் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Link Source: https://ab.co/3BtXg4T