Breaking News

விக்டோரியா மாகாணத்தில் புதிதாக இருபத்தியோரு பேருக்கு வைரஸ் பாதிப்பு தொற்று பாதித்தவர்கள் 10 பேர் குறிப்பிட்ட சமூகத்தில் அறிகுறிகளுடன் இருந்து வந்ததாக சுகாதாரத்துறை அறிவிப்பு

டெல்டா வகை வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் விக்டோரியாவில் மேலும் 21 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் மெல்போர்னில் இருந்தவர்கள் என்றும், இதில் 10 பேர் தொற்று அறிகுறிகள் உடனேயே குறிப்பிட்ட சமூக பரவலுக்கு காரணமாக இருந்தவர்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

மெல்போர்னில் ஊரகப் பகுதிகளில் குறிப்பிட்ட 11 பேர் தனிமைப்படுத்தப்பட்டு இருந்ததாகவும், மேலும் 10 பேர் தொற்று அறிகுறிகளுடன் இருந்த நிலையில் 21 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், இதன் காரணமாக அப்பகுதிகளில் முடக்க நிலை தொடர்வதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் Martin Foley அறிவித்துள்ளார்.

In Victoria, 21 new cases of the virus were reported by 10 people with symptoms in a particular community, according to the Department of Healthமெல்போர்னில் ஊரகப் பகுதியான Glenroy ல் தொடர் பரவல் அதிகரித்து வரும் நிலையில் வீட்டில் இருப்பவர்கள் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதே நேரத்தில் விக்டோரியாவில் தொற்றுப் பரவல் மையங்களாக கண்டறியப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 450 ஆக உயர்ந்துள்ளது.

வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் இதனை கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்படும் முயற்சிகள் பலனளிக்கவில்லை என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் Martin Foley கூறியுள்ளார்.

Melbourne நகரப்பகுதி, Glenroy, Melton South, Middle Park, Brunswick West, Wyndham Vale, the Newport மற்றும் West Footscray உள்ளிட்ட பகுதிகளில் மர்மமான முறையில் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படுவதாகவும், அங்கிருந்தவர்கள் மூலமாக பல்வேறு தரப்பினருக்கு தொடர்புச் சங்கிலி மூலமாக வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப் படுவதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

In Victoria, 21 new cases of the virus were reported by 10 people with symptoms in a particular community, according to the Department of Health..தொற்றுப் பரவல் மையங்களாக கண்டறியப்பட்ட இடங்களுக்கு வந்து சென்றவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது தொடக்கநிலை அறிவிக்கப்பட்டிருக்க கூடிய இடங்களில் அனுமதிக்கப்பட்ட பணிகளைத் தவிர வேறு எதற்காகவும் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும், முக கவசம் அணிவது கட்டாயம் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் மெல்போர்னில் அத்தியாவசிய தேவைகளுக்காக அனுமதிக்கப்பட்ட இடங்கள் மற்றும் நபர்கள் இடையேதான் தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதாகவும், இதனை கட்டுப்படுத்துவதற்கான ஒத்துழைப்பை குறிப்பிட்ட முன் களப் பணியாளர்கள் வழங்க வேண்டும் என்றும் சுகாதாரத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Link Source: shorturl.at/hwSWY