Breaking News

விக்டோரியா மாகாணத்தில் தளர்வுகள் அளிக்கப்பட்ட முதல் வாரத்தில் 1,166 பேருக்கு வைரஸ் பாதிப்பு : தொற்று பாதித்த 5 பேர் உயிரிழப்பு

In Victoria, 1,166 people were infected with the virus in the first week of relief. five infected and five died.

விக்டோரியாவில் 90 சதவீதம் பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட நிலையில் அங்கு பெரும்பாலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. 12 வயதிற்கு மேற்பட்ட 90% பேர் விக்டோரியாவில் தடுப்பூசி செலுத்திக் கொண்டது மிகப் பெரும் சாதனை என்றும், மருத்துவ துறையில் புதிய மைல்கல்லை எட்டிய இருப்பதாகவும் பிரிமியர் டேனியல் ஆண்ட்ரூஸ் பெருமிதம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட முதல் வாரத்தில் விக்டோரியாவில் புதிதாக 1,166 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 5 பேர் உயிரிழந்தனர். இதில் 10 வயதுக்கு கீழான குழந்தை ஒன்றும் தொற்று பாதிப்பால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது மாகாணத்தில் 9 ஆயிரத்து 581 பேர் தொற்று பாதிப்பால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களில் 453 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. டெல்டா பாதிப்பின் தீவிரம் மிக அதிகமாக இருப்பதைக் காட்டும் விதமாக புதிதாக தொற்று பாதிப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதாகவும் சுகாதாரத்துறை வருத்தம் தெரிவித்துள்ளது.

In Victoria, 1,166 people were infected with the virus in the first week of relief. five infected and five diedவிக்டோரியாவில் 12 வயதுக்கு மேற்பட்ட 89 சதவீதம் பேர் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட நிலையில் ஒரே நாளில் 6 ஆயிரத்து 920 டோஸ் தடுப்பு ஊசிகள் செலுத்தப்படுவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சில நாட்களுக்கு முன் மெல்போர்னில் நடைபெற்ற பெருந்தொற்று மசோதாவுக்கு எதிரான போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இந்த போராட்டம் தொற்றுப் பரவலுக்கான முக்கிய காரணமாக அமைந்தது என்று கூறப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் விக்டோரியா மற்றும் மெல்போர்ன் வரும் சர்வதேச மாணவர்கள் இரண்டு டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி இருந்தால் அவர்கள் தனிமைப் படுத்தப் பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் விமான நிலையத்தில் வருகை தந்த பின்னர் 72 மணி நேரத்திற்குள் நெகட்டிவ் சான்று அளிக்க வேண்டும் என்றும் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும் ஏற்கனவே அளிக்கப்பட்ட தளர்வுகளில் அதிகம் பேர் கூடும் நிகழ்வுகளில் பங்கேற்கும் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்றும் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

Link Source: https://ab.co/3HJkhDX