Breaking News

வடக்கு பிராந்தியத்தில், ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறிய சுரங்கத் தொழிலாளிக்கு $5000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

In the northern region, a miner has been fined $ 5,000 for violating curfew.

ஹோவர்ட் ஸ்பிரிங் பகுதியில் உள்ள சுரங்கத்தொழிலாளர்களில் பலருக்கு அண்மையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இதன் காரணமாக தொற்றாளர்களுடன் நேரடியாக தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமை படுத்திக்கொள்ள வேண்டும் என்று வடக்கு பிராந்திய சுகாதாரத்துறை கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.

ஆனால் விதி மீறி இத்தொழிலாளி டார்வின் பல்பொருள் அங்காடிக்கு சென்றது தெரியவந்துள்ளது.

ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியதற்கு 56 வயதான தொழிலாளருக்கு $5056 அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது

டார்வின் பகுதியில் உள்ள சுரங்கத்தொழிலாளிகள் 17 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால், அப்பகுதியில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமையுடன் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் தொற்றுடன் சுரங்கத்தொழிலாளி சென்ற கடையும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, அங்கு வந்தவர்களிடம் பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கு கட்டுப்பாடுகளை பின்பற்றுவதும், சுகாதாரத்துறையின் வழிமுறைகளை பின்பற்றினால் தான் , அனைவரும் பாதுகாப்பாக இருக்க முடியும் என்று வடக்கு பிராந்திய மாகாண முதல்வர் மைக்கல் கன்னர் தெரிவித்துள்ளார்.

Link Source: https://ab.co/3dHIQ7a