Breaking News

மத்திய தரைக்கடல் பகுதியில் “2 ஆயிரம் டன் ராட்சத சூரிய மீன்” வலையில் சிக்கிய நிகழ்வு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

In the Mediterranean, the 2 thousand tons of giant sunfish caught in the net has caused surprise.

மத்திய தரைக்கடல் பகுதியில் மீன்வர் வலையில் சிக்கியிருந்த அந்த சூரிய மீனை பார்த்த கடல் வாழ் உயிரின ஆராய்ச்சியாளரான Enrique Ostale க்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை. இவ்வளவு பெரிய ராட்சத சூரிய மீனை தன்னுடைய வாழ் நாளில் கண்டதில்லை என்றும் ஆச்சர்யம் விலகாமல் கூறுகிறார். இந்த ராட்சத சூரிய மீன் 3.2 மீட்டர் நீளமும், 2.9 மீட்டர் அகலமும் கொண்டதாக இருந்துள்ளது. வலையில் சிக்கிய மீன் குறித்து ஆய்வு செய்வதற்கான தன்னை அழைத்த போது, இவ்வளவு பெரிய சூரிய மீன் இருக்கும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்றும் கூறுகிறார்.

ஆயிரம் கிலோ எடை இயந்திரத்தில், அந்த சூரிய மீனை வைக்க முடியவில்லை என்றும், அதன் எடை சுமார் 2000 கிலோ இருக்கும் என்றும் Enrique Ostale கூறுகிறார்.

வலையில் சிக்கியிருந்த ராட்சத சூரிய மீனை முதலில் தனிமை படுத்திய பிறகு , கிரேன் உதவியுடன் மேலே கொண்டு வரப்பட்டது.

In the Mediterranean the 2 thousand tons of giant sunfish caught in the net has caused surprise.ஆராய்ச்சி கட்டுரைகளில் மட்டுமே இந்த சூரிய மீனின் வளர்ச்சி குறித்து அறிந்த தங்களுக்கு, தற்போது உயிருள்ள ஒரு ராட்சத சூரிய மீனை தொட்டுனர கிடைத்த வாய்ப்பு ஆராய்ச்சியாளராக மிக முக்கிய தருணம் என்றும் Enrique Ostale கூறுகிறார். மேலே கொண்டு வரப்பட்ட சூரிய மீனின் புறத்தோற்றத்தை அளந்த பிறகு, ஆராய்ச்சிக்காக அதனுடைய மரபணு மாதிரியும் சேகரிக்கப்பட்டது.
வரலாற்றுக்காலத்திற்கு முந்தைய உயிரினமாக கருதப்படும் சூரிய மீனை அழியும் கடல் வாழ் உயிரினங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் ஐரோப்பிய நாடுகளில் இதனை யாரும் உணவாக உட்கொள்வது இல்லை. .

சில வினாடிகள் ஆராய்ச்சியாளர்களுக்கு தன்னுடைய இருப்பை உணர்த்திய அந்த ராட்சத சூரிய மீனை, கடலில் விட்ட மறுகனமே துள்ளலுடன் அந்த பரந்த சமுத்திரத்தில் காணாமல் போனது.

Link Source: https://ab.co/3jy2PrE