ஆஸ்திரேலியாவில் டைனோசர் வாழ்ந்ததற்கான வரலாற்றுச் சான்றுகள் பலமுறை கிடைத்துள்ளன. கடந்த 1980-ம் ஆண்டு விக்டோரியாவின் கிரேட் பெருங்கடல் சாலை அமைந்துள்ள இடத்தில் ரேப்டர் வகை டைனோசரின் கால் தடம் ஆய்வாளர்களால் கண்டுப்பிடிக்கப்பட்டது.
தற்போது அதே பகுதியில் அமைந்துள்ள ஒரு பாறையின் மேற்பரப்பில் டைனோசரின் கால்தடம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இது இதுவரை ஆய்வாளர்களால் கண்டுப்பிடிக்கப்படாத புதிய வகை டைனோசரின் கால்தடம் என்று கூறப்பட்டுள்ளது.
மூன்று அடி அளவு கொண்ட இந்த கால் தடத்தை பார்க்கும் போது, இந்த புதிய வகை டைனோசர் ஈமு கோழி போன்ற தோற்றத்தில் இருந்திருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மொத்தமாக கால்தடம் 25 மீட்டர் இருப்பதால், இந்த டைனோசர் உருவத்தில் 2 மீட்டர் அகலம் கொண்டதாக இருந்திருக்கக் கூடும் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
குறிப்பிட்ட பகுதியில் நடத்தப்பட்ட முதல் நாள் சோதனை முடிவில் இதுவரை 60 கால்தடங்களை வாக்ஸ்டாஃப் என்பவரின் ஆய்வாளர் குழு கண்டுப்பிடித்துள்ளது. உலகளவிலுள்ள புதைபடிமவியல் ஆய்வாளர்களை இங்கு வரவழைத்து மேலும் பல்வேறு கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, இதுகுறித்து ஆவணப்படுத்தப்படும் என்று ஆய்வாளர் வாக்ஸ்டாஃப் கூறியுள்ளார்.