Breaking News

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 7,987 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் 50% சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கண்டறியப்படுவது தெரியவந்துள்ளது

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 7,987 கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.இதில் 50% தொற்று செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 9,62,935 நபர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இவர்களில் தற்போது 58,097 நபர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் மட்டும் 2558 கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 685, திருவள்ளூர் மாவட்டத்தில் 473 பேரும், காஞ்சிபுரத்தில் 203 பேரும் தொற்று பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் 29 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் சென்னையில் மட்டும் 8 பேர் உயிரிழந்துள்ளனர்

கடந்த 24 மணி நேரத்தில் 95,387 நபர்களுக்கு கொரோனா பாரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் இரண்டு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.