சிட்னியில் சேர்ந்தவர் Taanasau Fautua, இவர் ஹண்டர் மற்றும் நியூ கேஸ்டல் பகுதிகளில் அண்மைக் காலமாக வீடுகளில் உள்ள மரங்களை அகற்றுதல், கிளைகளை வெட்டுதல் போன்ற சேவைகளை செய்து வந்துள்ளார். சிட்னியில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், ஏற்பட்ட தொழில் முடக்கத்தின் காரணமாக இவர் நியூ கேஸ்டல் பகுதிக்கு இடம்பெயர்ந்ததாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அவருக்கு உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பை தொடர்ந்து, அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது தெரியந்துள்ளது.
தற்போது அவர் நியூ கேஸ்டைல் ஜான் ஹண்டர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் அவருடைய மரு மகனுக்கும், தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரின் மகனுக்கும் மேற்கொள்ளபட்ட பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளியாகாததால், அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
Taanasau Fautua தன்னுடைய பணியாளர்களுடன் பல்வேறு வீடுகளுக்கு சென்று பணி செய்ததால், அவர்களுக்கும் தொற்று பரவல் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள Taanasau Fautua, தன்னுடைய தவறுக்கு மனம் வருந்தி மன்னிப்பு கோருவதாக அவர் தெரிவித்துள்ளார். ஏராளமானவர்கள், தன் மீது கோபத்தை வெளிபடுத்துவதாகவும், இதற்கு தான் முழு பெறுப்பேற்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் இருந்து வெளியிட்டுள்ள இந்த வீடியோவில், தன் தவறுகளை தான் முழுமையாக ஏற்பதாகவும், இதற்கு உரியை தண்டனையை தான் ஏற்க தயாராக உள்ளதாகவும் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
அதே நேரம், மரம் வெட்டுதல் எவ்வாறு அத்தியாவசிய பணிகளின் கீழ் வரும் என்பது குறித்து காவல்துறையினர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தன்னுடைய குடும்ப வறுமையின் காரணமாகவும், வருவாயை கருத்தில் கொண்டு தான் இந்த பணி செய்ய நியூ கேஸ்டைல் பகுதிக்கு வந்ததாகவும், வேறு எந்த நோக்கமும் இல்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
தினசரி பணிக்கு செல்வதற்கு முன்பு தன்னுடைய ஊழியர்களுக்கு கட்டாயம் முகக்கவசம் கொடுத்ததாகவும் Taanasau Fautua தெரிவித்துள்ளார்.
Link Source: https://ab.co/38CQAEm