Breaking News

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் ஒரே நாளில் 1259 பேருக்கு தொற்று பாதிப்பு : 16 வயதுக்கு மேற்பட்ட 80 சதவீதம் பேர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்

In New South Wales, 1259 people were infected in a single day. 80 percent over the age of 16 received at least one dose of the vaccine.

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 1259 பேருக்கு டெல்டா வகை வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 252 ஆக அதிகரித்துள்ளது. தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் அதே வேளையில் உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக நியூ சவுத் வேல்ஸ் சுகாதாரத்துறை கவலை தெரிவித்துள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் 16 வயதிற்கு மேற்பட்ட 80 சதவீதம் பேர் குறைந்தபட்சமாக முதல் டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டிருப்பதால், சிட்னி உள்ளிட்ட 12 ஊரக பகுதிகளுக்கான இரவுநேர நிலை தளர்த்த படுவதாக பிரீமியர் Gladys Berejiklian தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் மாதம் 23ம் தேதியிலிருந்து அமலில் உள்ள இந்த முடக்க நிலை தற்போது நீக்கப்படுவது மூலமாக மக்கள் மற்ற சேவைகளுக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வெளியில் செல்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பெர்னித் ஊரகப் பகுதிகளான Canterbury-Bankstown, Cumberland, Fairfield, Georges River, Liverpool, Parramatta, Strathfield ஆகிய இடங்களில் முடக்க நிலை தளர்த்தப்பட்டு இருப்பதாகவும் பிரிமியர் அறிவித்துள்ளார்.

In New South Wales, 1259 people were infected in a single day. 80 percent over the age of 16 received at least one dose of the vaccine..இருளடைந்த சுரங்கப் பாதையின் இறுதியில் சிறிது வெளிச்சம் தெரிவதாகவும், ஆனால் நாம் அதை அடைவதற்காக அதிகம் உழைக்க வேண்டி இருப்பதாகவும் பிரிமியர் Gladys Berejklian சூசகமாக தெரிவித்துள்ளார். தோற்றுப் பரவல் அதிகமாக இருக்கும் இடங்களில் மக்கள் தங்கள் கவசங்களை அவசரப்பட்டு கீழே வீசி விட வேண்டாம் என்றும், முழுவதுமாக 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ளும்வரை பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

70% பேருக்கு 2 டோஸ் தடுப்பூசி போடும் இலக்கு குறிப்பிட்ட கால அளவுக்கு முன்னதாகவே முடித்து விடப்படும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அதற்கு மக்களின் ஒத்துழைப்பும் அவசியம் என்றும் பிரீமியர் கூறியுள்ளார். முடக்கநிலை நீக்கப்பட்டு அனைத்து சுதந்திரங்களையும் அனுபவிக்க வேண்டுமென்றால் விரைந்து இரண்டாவது தடுப்பூசியும் போட்டுக் கொள்ளுமாறு Gladys Berejiklian தெரிவித்துள்ளார்.

Link Source: https://bit.ly/3tO4Hk6