Breaking News

சீனாவின் கிழக்கு கடற்கரை பகுதிகளை துவம்சம் செய்யும் In – Fa சூறாவளி : மூன்று நாட்கள் வெள்ளத்தில் சிக்கி தத்தளித்த நபர் மீட்பு

In - Fa hurricane hits China's east coast. Three-days flood victims rescued

மத்திய சீனாவின் Zhengzhou, ஹெனான் மாகாணத்தில் கடந்த வாரம் முழுவதும் கடும் சூறாவளி, In fa புயல் காரணமாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதுவரை சீனாவின் வரலாற்றில் இல்லாத வகையில் பெய்து வரும் கனமழையால் 58 பேர் இதுவரை உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதால் அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

In - Fa hurricane hits China's east coast. Three-days flood victims rescued,.இதனிடையே வெள்ளத்தில் ஷாங்காய் -ல் சுரங்க பாதையில் சகதியில் சிக்கி உயிரிழந்த 12 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அந்த பகுதியில் உள்ள பெரும்பாலான வீடுகள் மற்றும் மருத்துவமனைகள் வெள்ளத்தால் பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ள நிலையில், அவர்களை மீட்பதற்காக மீட்புக் குழுவினர் புல்டோசர்கள் மற்றும் ரப்பர் படகுகளைப் பயன்படுத்தி மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Zhengzhou மாகாணத்தின் Jincheng சர்வதேச பிளாசா ஒன்றில் மழை வெள்ளம் காரணமாக ஏற்பட்ட இடர்பாடுகளில் சிக்கிய Li Yongsheng மூன்று நாட்கள் தவித்து வந்த நிலையில் மீட்புக் குழுவினர் அவரை பத்திரமாக மீட்டு்ள்ளனர். அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக சீன நாளேடு தெரிவித்துள்ளது.

In - Fa hurricane hits China's east coast. Three-days flood victims rescued,Hebi, Xinjiang உள்ளிட்ட பகுதிகளில் மழை பொழிவதும் இருந்தாலும் In Fa பாதிப்புகளில் இருந்து மக்கள் இன்னும் மீளவில்லை. புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மீண்டு வருவதற்கு காலதாமதம் ஆகும் என்று கூறப்படுகிறது. பெரும்பாலான பகுதிகளில் காணாமல் போனவர்களைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

புயல் எச்சரிக்கையின் காணமாக Xinjiang பகுதியில் பள்ளிகள், மார்கெட், கடைகள் உள்ளிட்டவைகளை அடைப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் சாலைப் போக்குவரத்தும் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டைபூன் In Fa புயலின் காரணமாக இந்தப் பகுதியில் இயக்கப்படவிருந்த 100க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இது வரை 9 லட்சத்து 20 ஆயிரம் பேர் வீடுகளில் இருந்து மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்படுள்ளனர். 4 ஆயிரம் வீடுகள் முற்றிலுமாக வெள்ளத்தில் சிக்கி உருக்குலைந்தது.

இதே போன்று, தைவான், பிலிப்பைன்ஸ், மணிலா உள்ளிட்ட இடங்களிலும் கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரையோர மக்களுக்கு எச்சரக்கை விடுக்கப்படுள்ளது. வெள்ளம் வடியும் பட்சத்தில் ஏற்பட்ட பாதிப்பகள், உயிரிழப்புகளின் முழுவிவரம் தெரியவரும் என்று கூறப்படுகிறது.

Link Source: https://ab.co/3f1LXHw