Dax Shepard -ன் The Armchair Expert வலையொலிக்கு அளித்த விரிவான நேர்காணல் ஒன்றில் இளவரசர் ஹாரி பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். தன்னுடைய இருபதாவது வயதில் அரச குடும்பத்தை விட்டு தான் வெளியேற நினைத்ததாக கூறியுள்ளார். மேலும், இந்த அரச வாழ்க்கை என்பது ஒட்டு மொத்த வாழ்க்கையும் ஒரு ரியாலிட்டி ஷோ போல வாழ்ந்து முடியும் தி ட்ரூமன் ஷோ படத்தையும், ஒரு விலங்கியல் பூங்காவில் இருப்பதையும் ஒப்பிடுகிறார் இளவரசர் ஹாரி.
Oprah Winfrey உடனான பிரத்யேக நேர்காணலுக்கு பிறகு இரண்டு மாதங்கள் கழித்து இந்த வலையொலி வெளியாகி இருக்கிறது. மேலும் இளவரசர் மறைவிற்கு ஒரு மாதத்திற்கு பின்னர், இந்த வலையொலியில் அரச குடும்பத்தின் நிறவெறி தொடர்பாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் முன்வைத்துள்ளனர். மேலும் ஒரு Duchess of Sussex குறித்தும் ஏராளமான கருத்துகளை பகிர்ந்து கொண்டு்ள்ளனர்.
மேகன் உடனான தனது இரண்டாவது குழந்தை பிறந்த பின்னர் இளவரசர் சார்லஸிடம், Oprah நேர்காணலின் போது உணர்வுப்பூர்வமாகவும், நிதி ரீதியாகவும் துண்டித்தது ஏன் என வினவ உள்ளதாக கூறியுள்ளார்.
தான் யாரையும் குற்றம் சாட்ட வேண்டும் என்ற நோக்கில் அவர்களை நோக்கி குறை கூறவில்லை என்றும் ஹாரி விளக்கமளித்துள்ளார். அதே நேரத்தில் வலிகளையும் வேதனைகளையும் தான் தாங்கிக் கொண்டதாகவும், அது தன்னுடைய தந்தையால் பெற்றோர்களால் தனக்கு ஏற்படுத்தப்பட்டது என்றும் ஹாரி கூறியுள்ளார். மேலும் தன்னுடைய பிள்ளைகளிடம் தான் அதனைத் தொடர விரும்பவில்லை என்றும் ஹாரி கூறியுள்ளார்.
இது மரபணு ரீதியாக வலிகளையும், வேதனையும் ஏற்படுத்தக்கூடியது என்றும், இதை எந்த சூழலில் கடத்தக் கூடாது என்று கூறியுள்ளார். நாம் நம் பிள்ளைகளிடம் இது எனக்கு நேர்ந்தது, அதை உனக்கு நேராமல் தான் பார்த்துக் கொள்வேன் என உறுதியளிக்க வேண்டும் என்றும் ஹாரி தெரிவித்துள்ளார்.
தான் இதுவரை பார்த்திராத கேட்டிராத ஒரு விஷயத்திற்காக துண்டாடப்படுவது எப்படி சரியானதாக இருக்கும் என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், அவரின் கடந்தகால வாழ்க்கை தனக்கு தெரியும் என்றும், அவருக்கு நேர்ந்தது எல்லாம் தன்னிடம் வெளிக்காட்டுவது எப்படி சரியானது இல்லையோ அதைப் போலவே தானும் தன் பிள்ளைகளிடம் அதை செய்ய மாட்டேன் என்றும் ஹாரி கூறியுள்ளார்.
மூன்று மாதங்களுக்கு முன்னர் அரச குடும்பத்தின் அனைத்து நிலைகளையும் உதறிவிட்டு மேகனுடன் நிரந்தரமாக அமெரிக்காவில் குடிபெயர திட்டமிட்டு இருந்ததாகவும் ஹாரி குறிப்பிட்டுள்ளார்.
தன் தாய் இளவரசி டயானாவின் மரணம் தன்னை இந்த அரச வாழ்க்கையிலிருந்து வெளியேறுவதற்கு உந்தித் தள்ளியது என்றும் ஹாரி தெரிவித்துள்ளார். இது சரியான வேலை தானா என்றும் இதற்காக எவ்வளவு தூரம் பல்லைக் கடித்துக் கொண்டு இருக்கமுடியும் என்றும் ஹாரி வினவியுள்ளார்.
அழியாத விளையாட்டுகள் தொடர்பாக பல்வேறு ஆவண படங்களை தயாரிக்க இளவரசர் ஹாரியும், அவரது மனைவி மேகனும் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்நிலையில் அரச குடும்பத்தின் இளவரசர் பல்வேறு தகவல்வலை மனம் திறந்து பேசியுள்ளது மக்களிடையே பேசு பொருளாகி உள்ளது.