Breaking News

வீட்டின் சுவரில் நூற்றுக்கணக்கான சிலந்திகள்..வீட்டையே எரித்த கொடூரம் !

சிட்னியின் வடக்கு கடற்கரை பகுதியில் உள்ள ஒரு வீட்டின் படுக்கை அறையில் நூற்றுக்கணக்கான சிலந்திகள் சுவரின் மீது படர்ந்து உள்ளதாக Claudia என்ற பெண் தெரிவித்துள்ளார். தனது மகளின் படுக்கை அறை சுவர்களில் மற்றும் திரைச்சீலைகளிலும் கிட்டத்தட்ட 50 முதல் 60 சிலந்திகள் படர்ந்து இருப்பதாக அவர் கூறினார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், தனது மகள் அதே அறையில் தான் தூங்க சென்றதாகவும், மேலும் இந்த சம்பவத்தால் வீட்டில் யாரும் பயப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.தனது மகள் மீண்டும் அறையில் தூங்க மாட்டார் என்று நகைச்சுவையாகக் கூறினார்.சிலந்திகளுக்கு ஜன்னலைத் திறந்து விட முயன்றபோது அனைவரும் பயந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

spidersசிலந்திகள் அதிகமாக இருக்கும் நிலையில் வீட்டை எரிக்க முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக எடுக்கப்பட்ட வீடியோ பதிவு சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாக பரவியது . இதை பார்த்த பலரும் Claudia குடும்பத்திற்கு உதவி செய்ய முன் வந்துள்ளனர். “நாங்கள் எங்கள் வீட்டை நெருப்பால் இழந்தோம்,” என்று Claudia உருக்கமாக கூறினார்.

இதற்கு முன் Claudia இருந்த வீட்டு கேரேஜில் இதுபோல் தீ விபத்து ஏற்பட்டதை அவர் நினைவு கூர்ந்தார் . வெளியேறும்படி குழந்தைகளிடம் கத்தினேன் என்றும் ,அப்போதும் அருகில் இருந்தவர்கள் தங்குவதற்கும் , தேவைகளையும் கொடுத்து உதவி செய்தனர் என்று அவர் கூறினார்.