Breaking News

ஹாக்ஸ்பரி நிலச்சரிவில் 6 மீட்டர் குழிக்குள் சென்ற வீடு..!!

சிட்னியில் பெய்த கனமழைக்கு பிந்தைய பாதிப்பு காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் ஹாக்ஸ்பரி ஆற்றின் மேலே அமைந்துள்ள வீடு, 6 மீட்டர் ஆழமான குழியில் விழுந்தது.

House sinks 6m in Hawkesbury landslide

சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக, சிட்னியின் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது சிட்னியின் உட்புறப் பகுதிகள் பலவும் கனமழை பிறகான பிந்தைய பாதிப்புக்களைச் சந்தித்து வருகின்றன

சிட்னியின் வடமேற்கு பகுதியில் ஓடும் ஹாக்கீஸ்பெர்ரி ஆற்றில், கடந்த 1978-க்கு பிறகு கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நேரிட்ட நிலச்சரிவில், ஆற்றின் கரை மீது அமைந்திருந்த வீட்டின் ஒரு பகுதி 6 மீட்டர் ஆழமான குழியில் விழுந்தது.

House sinks 6m in Hawkesbury landslide,உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த மீட்புப் படையினர், நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோரை உடனடியாக காப்பாற்றினர். அதையடுத்து சம்பவ இடத்துக்கு அவசர ஊர்தி வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, அதில் மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதற்கிடையில் மாநில வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிட்னியை ஒட்டியுள்ள கடற்கரையில் சில நாட்களுக்கு அதிக சீற்றம் காணப்படும் என தெரிவித்துள்ளது. இதனால் மீனவர்கள், கடலுக்கு செல்வோர், பொதுமக்கள் உள்ளிட்டோர் எச்சரிக்கை இருக்க வேண்டும் என கூறியுள்ளது.