Breaking News

ஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவாளர் Jimmy Lai சட்டவிரோதமாக Tiananmen சதுக்கத்தில் கூடியது தொடர்பான வழக்கு : 13 மாதங்கள் சிறை தண்டணை விதித்து நீதிமன்றம் உத்தரவு

Hong Kong Democrat Jimmy Lai's Illegal Gathering in Tiananmen Square. Court Orders 13 Months Jail

ஹாங்காங்கின் ஜனநாயக ஆதரவாளரும், தொழிலதிபருமான Jimmy Lai உள்ளிட்ட ஏழு பேர் தடை செய்யப்பட்ட Tiananmen சதுக்கத்தில் ஒன்றுகூடி போராட்டம் நடத்தியதாகவும், அதன் காரணமாக கடுமையான வன்முறைகள் வெடித்ததாகவும் அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது.

இதனை அடுத்து அவர்களை கைது செய்யப்பட்ட நிலையில் இது தொடர்பான வழக்கில் மாவட்ட நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரும் குற்றவாளிகள் என்றும், அவர்களுக்கு 13 மாதங்கள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

ஹாங்காங்கின் ஊடக ஜாம்பவானான ஜிம்மி லாய் மற்றும் அரசியல் தலைவரான மார்டின் லீ ஆகியோர் அனுமதி அளிக்கப்படாத பேரணியை நடத்தியதற்காக, குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இந்த ஏழு பேருமே தாங்கள் குற்றம் செய்யவில்லை என வாதிட்டனர். ஆனால் தற்போது சிறைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறார்கள்.இவர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், அரசியல் ரீதியில் அவர்கள் துன்புறுத்தப்படுவதை எதிர்த்து கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் நீதிமன்றத்துக்கு வெளியே ஒரு சிறிய குழு போராட்டம் நடத்தியது.

Hong Kong Democrat Jimmy Lai's Illegal Gathering in Tiananmen Square. Court Orders 13 Months Jail.இந்த ஏழு பேரில் சிலர், மற்ற பல வழக்குகளைச் சந்தித்து வருகின்றனர். அதில், 2019-ம் ஆண்டு போராட்டத்தைக் கட்டுப்படுத்த, சீனா அறிவித்த தேசிய பாதுகாப்புச் சட்டமும் அடக்கம். சீனாவின் இந்த தேசிய பாதுகாப்புச் சட்டத்தை மீறுபவர்கள் மீது, கடுமையான அபராதமும், நீண்ட கால சிறை தண்டனையும் விதிக்கப்படும். ஹாங்காங்கில் பல கட்ட ஜனநாயாகத்துக்கு ஆதரவான போராட்டங்களுக்குப் பிறகும், சீனா ஹாங்காங் மீது மென்மேலும் கடுமையான சட்ட திட்டங்களை விதித்து வருகிறது.

இதனிடையே நீதிமன்ற தீர்ப்பு குறித்து வளாகத்தில் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ள ஜிம்மி லாய், போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்றும், மாறாக நீதி கேட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், போராட்டத்தின் போது வன்முறையில் ரத்தம் சிந்தி உயிரிழந்த இளைஞர், பெண்களுக்காக நான் சிறை தண்டனையை ஏற்றுக்கொள்வதாகவும் Jimmy Lai தெரிவித்துள்ளார்.

Link Source: https://ab.co/3F5Au4A