Breaking News

ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் நகரில் 60 ஆண்டுகளில் இல்லாத உச்சபட்ச பனிப்பொழிவு : நவம்பர் மாதத்தின் இரவுகள் குளிர் நிறைந்தவையாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Hobart, Australia has the worst snowfall in 60 years. the Meteorological Department warns that November nights will be cold.

ஹோபர்ட், தாஸ்மானியா உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு விடியும் பொழுது பனிப்போர்வை போர்த்தியதாகவும், கடும் குளிராகவும் இருந்து வருகிறது. பனிப்போர்வை 200 மீட்டர் அளவுக்கு இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Hobart, Australia has the worst snowfall in 60 years. the Meteorological Department warns that November nights will be cold..மேலும், நவம்பர் மாதத்தின் பனிப்பொழிவு மைனஸ் 2.9 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்றும், இது 1953க்கு பிறகான உச்சபட்ச பனிப்பொழிவாக இருக்கும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மேற்கு மற்றும் மத்திய Plateau மாவட்டங்களில் 30 செ.மீ அளவுக்கு பனிப்பொழிவு இருக்கும் என்றும், இந்த அறிவிப்பு வடகிழக்கு தீவுகளுக்கும் பொருந்தும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் Luke Johnston தெரிவித்துள்ளார்.

Cressy – ன் மேற்கு மத்திய பகுதிகளில் 2 டிகிரி முதல் 1 டிகிரி செல்சியஸ் அளவுக்கு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ள வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. இதே போன்று தாஸ்மானியாவின் தெற்கு பகுதிகளிலும் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. நவம்பர் மாதத்தில் உச்சபட்ச பனிப்பொழிவை குறிப்பிட்ட பகுதிகள் சந்திக்க நேரிடும் என்றும், இது கடல்மட்ட அளவை விட அதிகரிக்கக் கூடும் என்றும் வானிலை ஆய்வுமைய இயக்குநர் Luke Johnston எச்சரித்துள்ளார்.

Hobart, Australia has the worst snowfall in 60 years. the Meteorological Department warns that November nights will be coldமேலும், அண்டார்டிகா பகுதியில் இருந்து பனிக்காற்று வீசும் என்பதால், வாகன ஓட்டிகள் கடும் எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி போதுமான இடைவெளியில் வாகனங்களை இயக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. திங்கள்கிழமையை தொடர்ந்து வரும் நாட்களில் பனிப்பொழிவின் அளவு அதிகரிக்கக் கூடும் என்றும் இது 700 மீட்டர் வரை செல்லக் கூடும் என்று கூறப்பட்டுள்ளது. செவ்வாய், புதன் கிழமைகளில் ஹோபர்ட் பகுதிகளில் பனிப்பொழிவு குறையும் என்றும், இது மத்திய மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் அதிரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Link Source: https://ab.co/31SC8b8