Breaking News

Kangaroo Island – ஆஸ்திரேலியாவின் அற்புதங்கள்

1800ல் Captain Mathew Flinders-ஐ பிரிட்டிஷ் அரசாங்கம் Terra Australia-வின் தெற்கு கடற்கரையை ஆராய்ந்து அதை வரைபடமாக்க (Map) நியமித்தது. அதை ஆராய்ச்சி செய்தவர்கள் சிறிய கங்காருவை வேட்டையாடியதால் இந்த தீவு kangaroo Island எனப்பட்டது. இந்த தீவுக்கு வருபவர்கள் Reeves Point, Kingscote Museum, Hope Cottage, Old Mulberry Tree, First Settlers போன்ற நினைவு சின்னத்தை பார்வையிடலாம்.

முந்தைய ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் இந்த தீவில் எந்த உயிரினமும் வாழ முடியாது என்று கூறினர். பின் 1930ல் பழங்குடி மக்கள் முகாம் பல பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டன.

முந்தைய நாள்களில் விவசாயிகள் வாழ்க்கை இந்த காடுகளை நம்பியிருந்தது. அவர்கள் அங்குள்ள timber, snared possums, கங்காரு, wallabies ஆகியவற்றின் தோலை விற்றனர். மேலும் yacca gum , distilled eucalyptus oil ஆகியவற்றை சேகரித்தனர். இங்குள்ள Parndana Solider Settlement Museum மியூசியத்தை பார்வையிடும் போது பல சுவாஸ்ரயமான தகவல்களை நம்மால் பெற முடியும்.

1836ல் first settlementன் போது கங்காரு தீவில் 50க்கும் மேற்பட்ட கப்பல் உடைப்பு ஏற்பட்டது. இதனால் 1852ல் Lighthouses Cape Willoughby , 1858 ல் Cape Borda,1908 ல் Cape St Albans, 1909 ல்Cape du Couedic ஆகிய பகுதிகளில் கலங்கரை விளக்கத்தை அமைத்தனர்.

Adelaide விமான நிலையத்தில் இருந்து 30 நிமிடத்திலும் , Ferry-ல் இருந்து 45 நிமிடத்திலும் கங்காரு தீவை அடையலாம். தினமும் 4 இடங்களில் Cape Jervis மற்றும் Penneshaw விற்கு இடையில் Ferry சேவை இருந்தது. கங்காரு தீவின் பல பகுதிகளில் மற்றும் தனித்தன்மை வாய்ந்த பல இடங்கள் உள்ளன. இந்த இடத்தில் பல அறிய வேண்டிய பல ஸ்வாரஸ்யத்தகவல்கள் உள்ளன. இது அந்த இடத்திற்கு செல்லவும், அங்கு தங்குவதற்கும் பல ஒளிந்துள்ள ரகசியங்களை கண்டுபிடிக்கலாம்.

கங்காரு தீவின் தொலைவு மற்றும் தனிமை இத்தீவை ஒரு சிறந்த சூழலை உருவாக்கியுள்ளது. இங்கு பல பூச்சிகள் மற்றும் எந்த ஒரு நோயும் இல்லாத இடமாக உள்ளது. அருகிலுள்ள Fleurieu Peninsula சிறந்த உணவான , wine, wildlife போன்றவற்றை தருகிறது. வருடம் முழுவதும் விடுமுறையை கழிக்க போதுமான நடவடிக்கைகள் மீன்பிடித்தல், surfing, scuba, snorkelling, sailing, swimming போன்றவை உள்ளன.

கங்காரு தீவில் கடல் அலை ஓசை எழுப்புவதே அற்புதமாக இருக்கும் . அங்கே Bushland குடிசைகள் உள்ளன. அங்கு தங்குவதற்கு ஏற்ற இடங்கள் பல உண்டு.இந்த இடத்தை நேரில் ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்று கூறும் அளவிற்கு எண்ணற்ற அழகுகளை கொண்டுள்ளது இந்த தீவு என்று சொன்னால் அது மிகையாகாது.

source – tourkangarooisland.com.au/rich-history