Breaking News

வரலாற்றில் இடம் பிடித்த மேற்கு ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் : முதன்முறை உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது

மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த்தை சேர்ந்த 30 ஆராய்ச்சியாளர்கள் மட்டுமே ஒன்றிணைந்து இந்த ‘சாண்விட்ச்’ அளவு செயற்கைக்கோளை உருவாக்கி விண்ணில் செலுத்தி உள்ளனர்.

Historical Western Australian researchers. The first domestically made satellite was launched,.அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்ட SpaceX Dragon விண்கலம் மூலமாக Binar – 1 சிறிய வகை செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. இதன் மூலம் மேற்கு ஆஸ்திரேலியாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்ட முதல் செயற்கைக்கோள் என்ற வரலாற்று பெருமையை Binar 1 பெற்றுள்ளது.

தொழில்நுட்பத்தை முறையாக உருவாக்கி அதை செயல்படுத்தும் பட்டசத்தில் சரியான நேரத்தில் விண்ணில் பறக்க முடியும் என பேராசிரியர் Phil Bland கூறியுள்ளார். பெர்த் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து அடுத்த இரண்டு ஆண்டுகளில் 7 சிறிய வகை செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இலக்கு நிர்ணயித்துள்ளனர்.

Historical Western Australian researchers. The first domestically made satellite was launched....ப்ளோரிடாவின் Yagan Squareல் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு விண்ணில் ஏவப்படுவதை பார்த்தனர். பருவநிலை பிரச்சனைகள் இருக்கும் நேரத்தில் செயற்கைக்கோள் சென்றிருப்பதாகவும், புகைப்படங்கள் எடுத்து அனுப்பிவிட்டால் அதுவே பெரிய வெற்றி என்றும் பேராசிரியர் Phil Bland தெரிவித்துள்ளார். விண்கலம் ஏவப்பட்டதும் ஆராய்ச்சியாளர்கள் ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி, கண்ணீர் மல்க தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Historical Western Australian researchers. The first domestically made satellite was launched118 மாதங்கள் வரை விண்ணில் இருக்கும் Binar 1 செயற்கைக்கோள் நட்சத்திரங்களையும், மேற்கு ஆஸ்திரேலியாவின் செயற்கைக்கோள் புகைப்படங்களையும் எடுத்து அனுப்பும் என்றும் Phil Bland கூறியுள்ளார். Binar 1 -ஐ விட ஆறு மடங்கு பெரிய திட்டங்களையும் நாசாவின் பங்களிப்புடன் தயாரிக்க பெர்த் ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டுள்ளனர். மேற்கு ஆஸ்திரேலியாவுக்கான தனித்த இடத்தை உருவாக்கும் முயற்சி தொடர்ந்து நடைபெறும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Link Source: https://ab.co/3mJjvid