Breaking News

பிரிஸ்பனில் மீண்டும் உயர்நிலை எச்சரிக்கை நிலை..முகக்கவசம் கட்டாயம் !

High covid-19 alert again in Brisbane.

Stafford நகரத்தை சேர்ந்த 26 வயதுடைய நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் கொரோனா தொற்று அதிகம் உள்ள பிரிஸ்பன் மற்றும் Moreton Bay-யில் உள்ள பல இடங்களுக்கு சென்று வந்துள்ளார். இதனால் பிரிஸ்பனில் மீண்டும் உயர்நிலை எச்சரிக்கை நிலை உருவாகியுள்ளது.

Princess Alexandra மருத்துவமனை மருத்துவரின் தொற்றுடன் இது தொடர்புடையதாக மரபணு சோதனையில் தெரியவந்துள்ளது. இதனால் அதிகாரிகள் பல பகுதிகளில் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

Queensland Chief Health Officer Jeannette YoungQueensland Chief Health Officer Jeannette Young கூறுகையில், பிரஸ்பேன் மற்றும் Moreton Bay பகுதிகளில் உள்ளவர்கள் யாருக்காவது உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் தானாக முன்வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதனால் தொற்று பரவாமல் தடுக்க முடியும் என்று கூறினார் .

Carindale Shopping Centre, Market Organics at Newmarket, Baskin-Robbins Ice Cream at Everton Park, Genki Mart at Alderley, Mamma’s Italian Waterfront Restaurant at Redcliffe, Stafford, Nundah Respiratory Clinic at Nundah போன்ற இடங்களுக்கு யாரேனும் சென்று வந்திருந்தால் அவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றார்.

மேலும் குறைந்த தொற்று உடைய பகுதிகளான Gasworks Plaza, KFC drive சென்றவர்கள் உடல்நிலை சரியில்லாமல் போனால் பரிசோதனை செய்ய அறிவறுத்தப்பட்டுள்ளனர்.

mask mandatoryவெள்ளிக்கிழமை முதல் Brisbane மற்றும் Moreton Bayல் உள்ள முதியோர் பாதுகாப்பு மையம், மருத்துவமனை போன்ற இடங்களுக்கு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. அதிக கூட்டம் இருக்கும் இடங்களில் கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும் என்றார். மேலும் அவர் கூறுகையில், நீங்கள் பாதுகாப்பாக இருக்க விரும்பினால் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு அவசிய தேவைகளுக்கு வெளியே செல்ல நேரிட்டால் இரண்டு மீட்டர் சமூக இடைவெளியை பின்பற்றி முககவசம் அணிந்து செல்லவும், மக்களை வலியுறுத்தினார்.

இந்த தொற்றின் பாதிப்பாக மற்றொரு ஊரடங்கு இருக்காது என்று நம்புவதாகவும், மக்கள் அதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.