Breaking News

விக்டோரியாவில் பெரும்பாலான பகுதிகளில் கடும் புயல், மழை : ஒரு லட்சம் வீடுகள் மின்சாரமின்றி இருளில் மூழ்கின

விக்டோரியாவின் பெரும்பாலான பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கடுமையான சூறைக்காற்று காரணமாக மின் மாற்றிகள் மற்றும் மின்கம்பங்கள் விழுந்ததில் ஒரு லட்சம் வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு பெரும்பாலான நகரங்கள் இருளில் மூழ்கியது. மாகாண அவசர சேவை மையமான SES -ற்கு இதுவரை 5 ஆயிரத்து 100 அழைப்புகள் வந்துள்ளதாகவும் படிப்படியாக மீட்புப் பணிகளை துரிதப்படுத்தி வருவதாகவும் மாகாண அவசர சேவை மையத்தின் ஆணையர் Andrew Crisp தெரிவித்துள்ளார்.

அவசர மீட்பு பணிகளுக்காக வரும் பெரும்பாலான அழைப்புகள் மரம் துண்டிக்கப்பட்டு சாலைகளில் விழுந்து இருப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அதே நேரத்தில் மரங்கள் மின்கம்பங்கள் மீது விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருப்பதாகவும் புகார்கள் வந்து இருப்பதாக அவசர சேவை மையத்தின் ஆணையர் கூறியுள்ளார்.

Heavy storm and rain in most parts of Victoria. One lakh homes plunged into darkness without electricity.இதுவரை 7 வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்து விட்டதாகவும் தொடர்ந்து பாதிப்புகளை கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது அவசர சேவை மையத்தின் குழுக்கள் 1300 பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் தொடர்ந்து படிப்படியாக அழைப்புகளுக்கு பாதிப்பின் அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்பட்டு மீட்புப்பணிகள் நடைபெறும் என்றும் மாகாண அவசர சேவை மையம் தெரிவித்துள்ளது.

மீட்புப் பணிகளில் ஏற்படும் தாமதம் காரணமாக மீண்டும் மின்சார இணைப்பு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருவதாகவும் படிப்படியாக அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் கிடைப்பதற்கான சீரமைப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் என்று ஆஸ்திரேலியா எனர்ஜி மார்க்கெட் ஆபரேட்டர் Jonathon Geddes கூறியுள்ளார்.

மெல்போர்ன், விக்டோரியாவின் வட கிழக்கு பகுதிகளில் சேதங்கள் அதிக அளவில் ஏற்பட்டுள்ளதாகவும் அந்தப் பகுதிகளில் மீட்புப்பணிகள் சீரடைந்து மின்சாரம் கிடைப்பதற்கு இன்னும் மூன்று நாட்கள் கால அவகாசம் தேவைப்படும் என்றும் அவசர சேவை மையம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைத்து விரைவில் போக்குவரத்திற்கு வழி செய்யப்படும் என்றும், பாதுகாப்பு கருதி பூங்காக்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்கள் மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Link Source: shorturl.at/enJL6