Breaking News

வங்கதேசத்தில் தொடரும் கனமழை – இந்தியாவை நாடும் மக்கள்

வங்கதேசத்தில் பெய்து வரும் கனமழையில் சிக்கில் 25-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது

Heavy rains continue in Bangladesh - People seeking India

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வங்கதேசம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அந்நாட்டின் தாழ்வான பகுதிகளில் புகுந்த மழைவெள்ளத்தால் கோடிக்கான வீடுகள் நீரில் மூழ்கிவிட்டன. அத்தியாவச பொருட்கள்,அடிப்படை வசதிகளுக்கு லட்சக்கணக்கான மக்கள் காத்துக்கிடக்கின்றனர்.

Heavy rains continue in Bangladesh - People seeking India.இந்த மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 25-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. உதவிகளை வேண்டி பலரும் இந்தியாவுக்கு வந்தபடி உள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால், நீரின் அளவு உயர்ந்து வருகிறது. இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களை தேடி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வங்கதேசம் மட்டுமில்லாமல், இந்த மழை வெள்ளத்தில் சிக்கி இந்தியாவின் அசாம் மாநிலம் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது. அங்கு குறிப்பாக 17 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. எனினும் மழைப் பொழிவு தொடர்ந்து இருந்து வருவதால் சிரமம் நீடிக்கிறது.

பருவநிலை மாற்றம் காரணமாக வங்கதேசம் இன்னும் பல்வேறு சிக்கல்களை சந்திக்கும் என்று ஐ.நா அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. அதனால் அந்நாட்டில் வாழும் மக்களில் 17 சதவீதத்தினரை வேறு பகுதிகளில் குடியமர்த்துவதற்கு வங்கதேச அரசு முயற்சி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.