Breaking News

சுகாதாரத் துறை பிரச்னை, விலைவாசி உயர்வு குறித்து பிரதமர் முக்கிய முடிவு..!!

மக்களவையில் பிரதமர் ஆண்டனி அல்பானிஸ் கலந்துகொண்ட கூட்டத்தொடரில் சுகாதாரப் பணியாளர்களுக்கான தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வு தொடர்பான முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

Health sector problem, PM's main decision regarding price rise

ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த ஆண்டனி அல்பானிஸ் பதவியேற்றுள்ளார்.

பிரதமராக பொறுபேற்ற பிறகு அல்பானிஸ் , முதல் மக்களவை கூட்டத்தில் பங்கேற்றார்.

அப்போது மாநில மற்றும் மத்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலர் சுகாதாரத் துறையில் நிலவும் பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக கேள்வி எழுப்பினர்.

Health sector problem, PM's main decision regarding price rise.இப்பிரச்சனைகளுக்கான தீர்வுகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. அதையடுத்து விக்டோரியா மாகாண முதல்வர் டேனியல் ஆண்ட்ரூஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், இன்றைய மக்களவையில் நடைபெற்ற கூட்டம் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. சுகாதாரத்துறையில் நிலவும் பல்வேறு தட்டுப்பாடுகளை களைய மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளதாக தெரிவித்தார். ஆஸ்திரேலியாவில் சுகாதாரத்துறையில் பல்வேறு பிரச்னைகள் நிலவுகின்றன. குறிப்பாக சுகாதாரப் பணியாளர்கள் தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த மோரிசன் அரசாங்கம் தொட்டு இந்த பிரச்னை தொடர்ந்து வருகிறது. இதையடுத்து மக்களவையில் நடந்த கூட்டத்தில் மத்திய அரசு சுகாதாரத்துறைக்கு கூடுதல் நிதியை ஒதுங்க வேண்டும் என மாநில பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கு மத்திய அரசு முழுமனதாக சம்மத்தம் தெரிவித்துள்ளது. அதேபோல தொடர்ந்து அத்தியாவசிய பொருட்கள் விலை அதிகரித்து வருவது தொடர்பாகவும் மக்களவையில் விவாதிக்கப்பட்டுள்ளன. விரைவில் அதுதொடர்பாகவும் மத்திய அரசு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.