Breaking News

விக்டோரியாவின் சிறந்த பள்ளிப் பேருந்து ஓட்டுநர் இவர்தான்..!!

விக்டோரியா மாநிலத்தின் சிறந்த பள்ளி பேருந்து ஓட்டுநருக்கான விருது மாலி டிராக் அண்டர்பூல் பள்ளி ஊழியர் ராபர்ட் கிளாஸ்டருக்கு வழங்கப்பட்டுள்ளது.

He is the best school bus driver in Victoria.

விக்டோரியா மாநிலத்தில் பேருந்து சங்கத்தின் மாநாடு மற்றும் வர்த்தக கண்காட்சி நடைபெற்றது. அந்நிகழ்வில் அண்டர்பூல் பகுதியிலுள்ள மாலி டிராக் பள்ளி பேருந்து ஓட்டுநர் ராபர்ட் கிளாஸ்டர், நடப்பாண்டின் விக்டோரியா மாநிலத்தின் சிறந்த பள்ளிப் பேருந்து ஓட்டுநராக அறிவிக்கப்பட்டார்.

He is the best school bus driver in Victoria,சுமார் 50 ஆண்டுகளாக வாகன ஓட்டுநராக ராபர்ட் கிளாஸ்டர் இருந்து வருகிறார். அவருடைய குடும்பம் மூன்று தலைமுறையாக இந்த தொழில் ஈடுபட்டு வருகிறது. அண்டர்பூலில் இருந்து ஓயென் வரை தினமும் 100 கி.மீ தொலைவுக்கு இவர் பள்ளிப் பேருந்தை ஓட்டி வருகிறார். விருதை பெற்றுக்கொண்ட ராபர்ட் கிளாஸ்டர் நிகழ்வில் பேசுகையில், நான் சிறந்த ஓட்டுநருக்கான விருதை பெறுவதற்கு காரணமானவர்கள் மாணவர்கள் தான். பேருந்தில் மிகவும் அடக்கமாக நடந்துகொள்ளும் மாணவர்களை கொண்டிருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அவர்களுடைய நடத்தையை நான் மிகவும் பாராட்டுகிறேன் என்று தெரிவித்தார்.