Breaking News

ஆஸ்திரேலிய பாதுகாப்பு படை வீரர்களுக்கு உதவிய ஆப்கன் மொழிப்பெயர்ப்பாளருக்கு தவறுதலாக விசா வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதால் தற்போது அவர் பாகிஸ்தானில் அடைக்கலம் புகுந்துள்ளார்.

He is currently seeking asylum in Pakistan after an Afghan translator who assisted Australian security forces was reportedly wrongly issued a visa.

20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆப்கானிஸ்தானில் போரில் ஈடுப்பட்ட நேட்டோ படைகளுக்கும், அமெரிக்க, ஆஸ்திரேலியா படைகளுக்கும் ஏராளமான ஆப்கானிஸ்தானியர்கள் மொழிப்பெயர்பாளராக பணியாற்றினர்.

தற்போது தாலிபான்கள் காபூலை கைப்பற்றியுள்ளதால், மொழிப்பெயர்பாளர்களின் உயிருக்கு அச்சுறுதல் நிலவி வருகிறது.

He is currently seeking asylum in Pakistan after an Afghan translator who assisted Australian security forces was reportedly wrongly issued a visa.,,அந்த வகையில் ஆஸ்திரேலிய பாதுகாப்பு படைவீரர்களுக்கு மொழிப்பெயர்ப்பாளராக பணியாற்றிய ஹாசன் என்பவர் சுமார் 6 ஆண்டுகளுக்கு மேலாக ஆஸ்திரேலிய படை வீரர்களுக்கு மொழி பெயர்பாளராக பணியாற்றியுள்ளார். ஆனால் 2011 ல் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு குடும்பத்துடன் இடம் தஞ்சம் புக, மனிதாபிமான அடிப்படையில் விசா கோரி விண்ணப்பித்திருந்தார்.

ஆனால், அவருடைய விசா பலமுறை நிராகரிக்கப்பட்டது.

He is currently seeking asylum in Pakistan after an Afghan translator who assisted Australian security forces was reportedly wrongly issued a visa...தாலிபான்களினால் தங்கள் குடும்பதிற்கு அச்சுறுத்தல் இருப்பதால் கடந்த 8 ஆண்டுகளாக அவர் மறைவிடத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அண்மையில் இவருக்கு ஆஸ்திரேலிய குடியுரிமை துறையில் இருந்து வந்த மின்னஞ்சலில் , அவருக்கும், அவரது குடும்பத்திற்கும் விசா வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து, தன்னுடைய மறைவிடத்தில் இருந்து வெளியேறி காபூலை நோக்கி தன்னுடைய மூன்று பிள்ளைகளுடன் சென்றுள்ளார்.

ஆனால் மீண்டும் வந்த இன்னொரு மின்னஞ்சலில் அவருக்கு தவறுதலாக மின்னஞ்சல் அனுப்பபட்டதாக தெரிவிக்கப்பட்டதால் அவர் செய்வதறியாமல் தவித்துள்ளார்.

இதனால் அவர் வேறு வழியில்லாமல் பாகிஸ்தானில் அகதியாக தஞ்சம் புகுந்துள்ளார்.

ஹாசனுக்கு தாலிபான்களுடன் தொடர்பிருக்கலாம் என்று அமெரிக்க புலனாய்வுக்குழு வழங்கிய அறிக்கையின் அடிப்படையில் அவருக்கு விசா நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

He is currently seeking asylum in Pakistan after an Afghan translator who assisted Australian security forces was reportedly wrongly issued a visa..ஆனால் தாலிபான்கள் தன்னுடைய உயிருக்கு விலை நிர்ணயித்திருப்பதோடு, தன்னுடைய காலை உடைத்திருப்பதாகவும் தெரிவிக்கிறார் ஹாசன். ஹசனுடன் பணிபுரிந்த ராணுவ அதிகாரியான ஸ்கேன்ஸ், இதில் தவறு நிகழ்ந்திருப்பதாகவும், ஹசனுக்கு தாலிபான்களுடன் தொடர்பிருக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கிறார். ஹசனுக்கான தன்னுடைய போராட்டம் தொடரும் என்றும் ஸ்கேன்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்த தனிப்பட்ட விவகாரம் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.

Link Source: https://ab.co/3neaw8X