Breaking News

ஆஸ்திரேலியாவில் 2 மங்கிபாக்ஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் சிட்னி மற்றும் மெல்பேர்னில் வசிப்பது தெரியவந்துள்ளது.

Having been infected with 2 monkeyboxes in Australia, the victims are said to be living in Sydney and Melbourne.

அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட நாடுகளை தொடர்ந்து மங்கிபாக்ஸ் தொற்று ஆஸ்திரேலியாவில் பதிவாகியுள்ளது. அந்நாட்டில் இரண்டு பேர் இந்த தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். மெல்பேர்னில் வசிக்கும் 30 வயது நபருக்கும் சிட்னியில் வசிக்கும் 40 வயது நபருக்கும் மங்கிபாக்ஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Having been infected with 2 monkeyboxes in Australia, the victims are said to be living in Sydney and Melbourneஇவர்கள் இருவரும் சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஆஸ்திரேலியா வந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என விக்டோரியா மாகாண சுகாதார பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

வைரஸ் தொற்று காரணமாக ஏற்படும் இந்த பாதிப்பு எளிதில் பரவக்கூடியது இல்லை, எனவும் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு சிறியளவில் மட்டுமே அறிகுறிகள் தென்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 1958-ம் ஆண்டு மங்கிபாக்ஸ் பாதிப்பு குரங்களிடம் காணப்பட்டது. ஆனால் தற்போது எலிகளில் இருந்து இவை அதிகம் பரவுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.