Breaking News

ஆஸ்திரேலியாவில் எலக்ட்ரிக் கார்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களை அதிகரிக்க அரசு திட்டம் : மானியம் உயர்த்தப்படாத நிலையில் தனியார் பங்களிப்புடன் செயல்படுத்த புதிய முயற்சி

Government plans to increase charging stations for electric cars in Australia. New initiative to implement private contribution with no increase in subsidy

எந்தவித உமிழ்வையும் வெளிப்படுத்தாத பேட்டரி கார்களை பயன்படுத்துவதற்கான சூழலை உருவாக்குவதற்கு ஆஸ்திரேலிய அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதே நேரத்தில் இந்த விவகாரத்தில் ஆஸ்திரேலியர்களை எலக்ட்ரிக் கார்களை பயன்படுத்துவதற்கான அழுத்தத்தை நேரடியாக கொடுக்க முடியாது என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தனியார் பங்களிப்புடன் ஆஸ்திரேலியாவில் 50 ஆயிரம் சார்ஜ் ஸ்டேஷன்கள் நிறுவுவதற்கான முயற்சியில் அரசு ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் மூலமாக ஆஸ்திரேலியர்களை எலக்ட்ரிக் கார் வாங்குவதற்கு ஊக்கப்படுத்தும் முயற்சியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Government plans to increase charging stations for electric cars in Australia.. New initiative to implement private contribution with no increase in subsidyஅதேநேரத்தில் எலெக்ட்ரிக் கார்களுக்கான மானியம் என்பது பெருமளவு இல்லை என்றும், வரிச்சலுகைகள் குறைந்த அளவு மாசு ஏற்படுத்தும் வாகனங்கள் என எந்தவித அம்சமும் இல்லாத சூழலில் எலெக்ட்ரிக் கார்களுக்கான சந்தையை உருவாக்குவது தற்போதைய சூழலில் சவாலானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் மக்களை இதைத்தான் செய்ய வேண்டும் என நிர்ப்பந்திப்பது அரசின் வேலை அல்ல என்றும் பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் எலெக்ட்ரிக் கார்களுக்கான சந்தையை உருவாக்குவதில் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

மக்கள் எலக்ட்ரிக் கார் பயன்பாட்டுக்கு மாறுவதற்கான சூழலை உருவாக்க வேண்டும் என்றும், அதே நேரத்தில் தற்போது உள்ள உள்கட்டமைப்பு வசதிகள் அதற்கு பொருந்தும் வகையில் இருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

Government plans to increase charging stations for electric cars in Australia, New initiative to implement private contribution with no increase in subsidyதற்போதுள்ள நிலையில் மானியங்கள் இல்லாமல் குறைந்த விலையில் தொழில் நுட்பங்கள் நிறைந்த எலக்ட்ரிக் கார்களை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார். எலக்ட்ரிக் கார்கள் பயன்பாடு மற்றும் விற்பனையை அதிகரிப்பது அரசின் திட்டம் என்றும் இதன் மூலமாக எரிபொருள் வாயு வெளியேற்றும் புகையை பூஜ்ஜியமாக கட்டுப்படுத்துவதற்கான முழுமையான நடவடிக்கையில் அரசு உறுதியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து எலக்ட்ரிக் கார்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களில் பல்வேறு விவகாரங்களில் ஒழுங்குமுறை படுத்தி விரைவான உற்பத்தி, தொழில்நுட்பங்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களில் முக்கியத்துவம் ஆகியவை கவனத்தில் கொண்டு கார் உற்பத்தியை மேம்படுத்துவதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Link Source: https://ab.co/3qubjEs