Breaking News

சர்வதேச விரிவாக்க பணிகளுக்காக சீனாவுடன் விக்டோரியா அரசு மேற்கொண்ட ஒப்பந்தம் : முழுவதுமாக ரத்து செய்த மத்திய அரசு

Government of Victoria's Agreement with China on International Expansion The Federal Government annulled altogether

சர்வதேச சாலை விரிவாக்கப்பணிகளுக்கு மேற்கொள்ளப்படும் சீனாவின் Belt and Road Initiative ஒப்பந்தம் ஆஸ்திரேலிய அரசின் வெளியுறவுக் கொள்கைகளுக்கு முரணானது என வெளிறவுத்துறை அமைச்சர் Marise Payne கூறியுள்ளார்.

புதனன்று மாலை அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில், விக்டோரியா அரசு சீனாவுடன் மேற்கொண்ட ஒப்பந்தங்கள் காமன்வெல்த் வீட்டோ சட்டத்தின் கீழ் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், இதே போன்று ஈரான் மற்றும் சிரியாவுடனான இரண்டு ஒப்பந்தங்களும் ரத்து செய்யப்படுவதாகவும் வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டு்ள்ளார்.

Chinese Presidentமேற்கண்ட நான்கு ஒப்பந்தங்களையும் பரீசலனை செய்து பார்த்ததில் அவை முழுவதுமாக ஆஸ்திரேலிய அரசின் வெளியுறவுக் கொள்கை மற்றும் வெளிநாடுகளுக்கு எதிராக இருந்ததாகவும் கூறியுள்ளார். மாகாண அரசுகள் வெளிநாடுகளுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தை மத்திய அரசு தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி ரத்து செய்வது இதுவே முதன்முறை என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சீன அதிபர் ஷீ ஜிங்பிங்கின் முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களில் ஒன்றான Belt and Road Initiative திட்டத்திலேயே விக்டோரியா அரசு இணையவிருந்தது. இரண்டு வளர்ச்சி திட்டங்களையும் ஒருங்கிணைப்பது விக்டோரியாவின் வணிகத்தை சீனாவில் மேற்கொள்வது உள்ளிட்ட பல திட்டங்கள் அவற்றில் இருந்தன.

Government of Victoria's Agreement with China on International Expansion The Federal Government annulled altogether 1மேலும், கொரோனா தாக்கத்தில் இருந்து பொருளாதார ரீதியாக மீண்டு வரும் வகையில் முதலீடு மற்றும் வேலைவாய்ப்புகளை சீனா கொண்டு வர வேண்டும் என்றும், ஒருவேளை அபாயம் உருவாகும் பட்சத்தில் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்பதை ஏற்கனவே தெரிவித்துள்ளதாக விக்டோரியா ப்ரீமியர் Daniel Andrews கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவின் வர்த்தகத்தை பாதிக்கும் வகையிலான நடவடிக்கைகளை கடந்த 12 மாதங்களாக சீன அரசு தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்த்தாகவும் இது தொடர்பாக விசாரணை நடத்த பிரதமர் ஸ்காட் மோரிசன் உத்தவிட்டு இருந்தார்.

வெளிநாடுகளோடு மேற்கொள்ளப்படும் அனைத்துவிதமான உறவுகளையும், ஒப்பந்தங்களையும் மத்திய அரசு தொடர்ந்து கண்காணிக்கும் என்று வெளியிறவுத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியா இடையே மினரல்ஸ் திட்டங்களுக்காக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளதாகவும் அமைச்சர் Payne தெரிவித்துள்ளார்.