Breaking News

Gospers மலை காட்டுத்தீ ஏற்பட்டு ஒரு வருடம் நிறைவு !

Gospers மலையில் மின்னல் வெட்டால் ஏற்பட்ட ஆஸ்திரேலிய வரலாற்றின் மிக மோசமாக காட்டுத்தீ ஏற்பட்டு ஒரு வருடம் கழிந்துவிட்டது.
சென்ற ஆண்டு அக்டோபர் 26-ல் ஏற்பட்ட காட்டுத்தீ Lithgow, Hawkesbury, Hunter Valley, Lower Hunter, Cudgegong, Blue Mountains, Central Coast districts ஆகிய இடங்களில் 512,626 ஹெக்டேர் இடத்தை எரித்தது.

பிப்ரவரி தொடக்கத்தில் பெய்த மழையால் இந்த காட்டுத்தீ அணைந்தபொழுது மொத்தம் ஒரு மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் எரிந்து கோடிக்கணக்கான விலங்குகளை கொன்றது, நூற்றுக்கணக்கான வீடுகளை அழித்து கோடிக்கணக்கான மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த கொடூர சம்பவம் நடந்து ,ஒரு வருடம் கடந்த சூழ்நிலையில், கால நிலை மாற்றத்தை குறைக்க, இது போன்ற பேரழிவுகள் மீண்டும் நிகழாமல் பார்த்துக்கொள்ள கூடுதல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூகத் தலைவர்களும் வலியுறுத்தினர்.

காட்டுத்தீக்கு பருவ நிலை மாற்றம் தான் காரணம் என்று புரிந்தபோதிலும் அரசு அதை ஒழுங்குபடுத்துவதில் முன்னேறவில்லை என்று Blue Mountain Grammar School-ல் ஒன்பதாம் ஆண்டு படிக்கும் Luca Saunders சுட்டி காட்டி உள்ளார்.

குளிர்காலம் குறுகியதாகவும் வெப்பமாகவும் இருந்தது. மேலும் கோடைக்காலம் வரலாறு காணாத வகையில் வெப்பம் நிறைந்து இருந்தது. வறட்சியில் இருந்த சூழ்நிலையில் மின்னல் வெட்டியதால் இந்த காட்டுத்தீ ஏற்பட்டது என்று சிட்னி தீயணைப்பு வீரர் Mr Jim Casey தெரிவித்தார்.

இந்த தீ விபத்திற்கான மூல காரணங்களை ஆராய்ந்து அரசு செயல்படாமல் தவறியது மன்னிக்க முடையாத செயல் என்று அவர் தனது கருத்தை தெரிவித்தார்.

காலநிலை மாற்றத்தை சரி செய்ய fossil fuels எரிப்பது, அதை ஏற்றுமதி செய்வது, carbon-neutral-ஐ நோக்கி எதிர்காலத்தை செலுத்துவது போன்ற திட்டங்கள் இல்லாமல் அரசு சுரங்க வாயுவை தொடங்கவும், அதை விற்கவும் எச்சரிக்கிறது.ஆஸ்திரேலியா எரிந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில், பாதுகாப்பு போதுமானதாக இல்லை என்று Mr Casey தெரிவித்து உள்ளார்.