Breaking News

கிளாஸ்கோ பருவநிலை மாநாடு COP26 : உமிழ்வு இலக்கை உறுதியாக நிர்ணயிக்க ஆஸ்திரேலியாவுக்கு பிரிட்டன் வலியுறுத்தல்

Glasgow Climate Conference COP26, Britain urges Australia to set emission target

ஐ.நா சபை சார்பில் கிளாஸ்கோவில் நடைபெற உள்ள COP 26 பருவநிலை மாநாட்டுக்கு முன்னதாக 2030 ஆண்டுக்கான உமிழ்வு இலக்கை உறுதியாக நிர்ணயிக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய அரசுக்கு பிரிட்டன் உயர்மட்ட ஆணையர் Vicki Treadell வலியுறுத்தியுள்ளார்.

Glasgow Climate Conference COP26. Britain urges Australia to set emission target2005ஆம் ஆண்டில் இருந்ததைப் போன்று உமிழ்வு வெளியேற்ற இலக்கு 40 முதல் 50 சதவீதம் குறைக்கப்பட வேண்டும் என்றும், அதற்கான நடவடிக்கையை மத்திய ஆஸ்திரேலிய அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் Vicki Treadell கேட்டுக் கொண்டுள்ளார். தற்போதைய உடனடி இலக்கு 26 முதல் 28 சதவீதம் வரை கூடுதலாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது தங்களுக்கு ஏமாற்றத்தை அளிப்பதாக Vicki Treadell கூறியுள்ளார். உலகளாவிய அளவில் மக்கள் புழங்கு தன்மைக்கு ஏற்ப குறிப்பிட்ட சதவீதம் அளவுக்கு உணர்வு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், அதுவே பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும் என்றும் Vicki Treadell தெரிவித்துள்ளார்.

உலக நாடுகள் பெரும்பாலும் விவாதிக்கும் விவகாரங்களில் முக்கியமானதாக உமிழ்வு வெளியேற்ற கட்டுப்பாடு இருப்பதாகவும் பருவநிலை மாற்றத்தில் முக்கியப் பங்காற்றும் இதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அந்நாட்டு அரசுகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு பாரீஸில் நடைபெற்ற பருவநிலை மாநாட்டைத் தொடர்ந்து அங்கு எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் லண்டன் பெரும்பாலும் உமிழ்வு வெளியேற்றத்தை கட்டுப்படுத்தி விட்டதாக Vicki Treadell தெரிவித்துள்ளார். பல்வேறு நாடுகளில் 2050ஆம் ஆண்டு வரை தங்களுக்கான இலக்குகளை நிர்ணயித்து இருப்பதாகவும் ஆனால் ஆஸ்திரேலியா இதுவரை அந்த இலக்குகளை திட்டமிடவில்லை என்றோம் பிரிட்டன் உயர் மட்ட ஆணையர் கூறியுள்ளார்.

Glasgow Climate Conference COP26.. Britain urges Australia to set emission targetஐக்கிய நாடுகள் சபை சார்பில் கிளாஸ்கோவில் நடைபெற உள்ள பருவநிலை மாற்றம் தொடர்பான COP 26 மாநாட்டுக்கு இன்னும் 36 நாட்களே உள்ள நிலையில் அதற்குள் ஆஸ்திரேலியா இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும் என Vicki Treadell கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் பல்வேறு தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும், 2030ஆம் ஆண்டுக்குள் குறிப்பிட்ட சதவீதத்தில் உமிழ்வு வெளியேற்றத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதேநேரத்தில் கிளாஸ்கோ பருவநிலை மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்வது தொடர்பான அறிவிப்பு இன்னும் உறுதியாகாத நிலையில், அவர் நிச்சயம் மாநாட்டில் பங்கேற்பார் என பிரிட்டன் உயர்மட்ட ஆணையர் Vicki Treadell நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Link Source: https://bit.ly/3uQLsXn