Breaking News

நியூ சவுத் வேல்ஸ் முன்னாள் ப்ரீமியர் மீதான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை : எம்.பி Daryl Maguire மீது நம்பிக்கை வைத்திருந்ததாக Gladys Berejiklian விளக்கம்

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் ஊழலுக்கு எதிரான கண்காணிப்பு அமைப்பிடம் எம்பி Daryl Maguire பற்றி தெரிவிக்க தன்னிடம் எதுவும் இல்லை என்றும் Gladys Berejiklian கூறியுள்ளார். மேலும் தகவல் பரிமாற்றத்திற்காக இரண்டாவது போன் ஒன்றை முன்னாள் ப்ரீமியர் Gladys Berejiklian பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு இருக்கும் அவர் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார். அதுபோன்று இரண்டாவது போனை தான் பயன்படுத்த வில்லை என்று கண்காணிப்பு அமைப்பிடம் விளக்கம் அளித்துள்ளார்.

Gladys Berejiklian explains he had faith in MP Daryl Maguire over corruption allegations against former New South Wales premiere..மேலும் ஊழலுக்கு எதிரான தன்னாட்சி கண்காணிப்பு அமைப்பின் 2வது நாள் விசாரணையில் 2018ஆம் ஆண்டு அவருக்கும் Gladys Berejiklianக்கும் நடைபெற்ற உரையாடல் தொடர்பான குறுஞ்செய்திகளை எம்.பி. Daryl Maguire காட்டியுள்ளார். Gladys Berejiklian WeChat என்ற செயலியை தனது செல்போனில் டவுன்லோட் செய்து அதன் மூலமாகவே தகவல் பரிமாற்றத்தை செய்ததாகவும் Daryl Maguire கூறியுள்ளார்.

மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக என்கிரிப்டட் மெசேஜ் சேவையை பயன்படுத்தியதாகவும் இந்த விவகாரம் தொடர்பாக எம்பி Daryl Maguire மீது புகார் தெரிவிப்பதற்கு தன்னிடம் எதுவும் இல்லை என்றும் Gladys Berejiklian ஆணையத்திடம் கூறியுள்ளார்.

இந்நிலையில் எம்.பி Daryl Maguire அவருக்கான திட்டங்களை சரியாக கையாளாமல் போனதே Gladys Berejiklian உடனான ரகசிய உறவு பாதிக்க காரணமா என்ற கோணத்திலும் ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Gladys Berejiklian explains he had faith in MP Daryl Maguire over corruption allegations against former New South Wales premiere.ரியல் எஸ்டேட் உரிமையாளர்களுக்கு சலுகைகள் வழங்கியதாக கூறப்பட்ட காலகட்டத்தில் அது தொடர்பான இருவருக்குமான உரையாடல் குறித்த டெலிபோன் பதிவையும் விசாரணை ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளனர். அதில் எம்.பி Daryl Maguire பட்டியலிடும் பெயர்கள் தனக்கு தெரியாது என்றும், மற்றுமொரு சாதாரண விஷயமாகவே இதைப் பார்த்தாகவும் Gladys Berejiklian தெரிவித்துள்ளார். தான் தவறாக எதையும் செய்வதாக கணிக்கவில்லை என்றும் Gladys குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த உரையாடலில், சீன நிறுவனம் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளதாகவும், அதற்காக ஒரு டாலரும் தான் பெறவில்லை என்றும் எம்.பி Daryl Maguire கூற, உண்மையாக இருந்து வழக்கறிஞர் சொல்படி நடக்கவும் என Gladys Berejiklian பதிலளித்துள்ளார். Daryl Maguire மீது சம்மன் அனுப்பப்பட்ட போதும் அவர் தவறு செய்திருக்க மாட்டார் என நம்பியதாகவும், அவர் குறித்து ஆணையத்தில் தெரிவிக்க தன்னிடம் எதுவும் இல்லை என்றும் Gladys Berejiklian கூறியுள்ளார்.

Link Source: https://bit.ly/3nPjA2T