வெஸ்டர் சிட்னி பகுதியில் வசிக்கும் பலர் லிப்ரல் மற்றும் லேபர் போன்ற பிரதான கட்சிகளால் அதிருப்தி அடைந்துள்ளனர். அதனால் அப்பகுதியில் யுனைட் ஆஸ்திரேலியா பார்டியைச் (யு.ஏ.பி) சார்ந்தவர்களுக்கு வெற்றி வாய்ப்பை அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
கொரோனா காலக்கட்டத்தில் ஆளுங்கட்சி இப்பகுதியில் அமல்படுத்திய கட்டுப்பாடுகள் பொதுமக்களை மிகவும் கவலை அடையச் செய்தது. அதற்கு எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியும் எதுவும் கண்டுகொள்ளாமல் இருந்தது வெஸ்டர்ன் ஆஸ்திரேலிய மக்களுக்கு ஏமாற்றத்தை. இதன்காரணமாக இப்பகுதி வசிக்கும் பலர் யுனைட் ஆஸ்திரேலியா பார்டிக்கு ஆதரவு நல்கி வருவதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். சிட்னியின் வாட்சன் தொகுதிக்கு யு.ஏ.பி கட்சி சார்பாக ஜான் கவுகோலிஸ் போட்டியிடுகிறார். அவருக்கு கட்சியினர் பலர் வாட்சன் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளனர்.
பாலஸ்தீன இஸ்லாமிய பின்னணியைச் சேர்ந்த கவுகோலிஸ், யு.ஏ.பி கட்சியில் பலதரப்பட்ட மக்கள் இருக்கின்றனர். அனைத்து பிரிவு மக்களுக்குமான இடமாக எங்களுடைய கட்சி இருக்கிறது. இஸ்லாமியர்கள், இஸ்லாமியர் அல்லாதவர்கள், இந்துக்கள், புத்த மதத்தினர் என பல்வேறு தரப்பு மக்களால் இந்த கட்சி வழிநடத்தப்படுகிறது.
சிட்னியில் பல்வேறு தரப்பு மக்கள் வசிக்கின்றனர். அதனால் அவர்களுடைய தேவை மற்றும் அடிப்படை விஷயங்களை நாங்கள் புரிந்துகொள்ள முடியும். அதனாலேயே இப்பகுதியில் வசிப்பவர்கள் எங்களை தேர்வு செய்ய வாய்ப்பு அதிகம் என்று தெரிவித்துள்ளார்.